tamilnadu epaper

ஹைபோதெர்மியாவால் காசாவில் 15 குழந்தைகள் பலி

ஹைபோதெர்மியாவால் காசாவில் 15 குழந்தைகள் பலி

காசா பகுதியில் ஹைபோதெர்மியா காரணமாக 15 குழந்தைகள் பலியாகி யுள்ளன. பாதுகாப்பான தங்குமிடம் இல்லாத இந்த சூழல் பாலஸ்தீன குடும்பங்களுக்கு “குளிர்காலத்தை ஒரு கொடிய அச்சுறுத்தல் மிகுந்த காலமாக மாற்றியுள்ளது”. பால ஸ்தீனர்களுக்கு போர்வைகள் மற்றும் வெப்ப மூட்டும் ஹீட்டர்கள் அவசரத் தேவையாகி யுள்ளது. ஆனால் இஸ்ரேல் ராணுவம் அத்தியா வசியப் பொருட்களை பாலஸ்தீனர்களுக்கு கொடுக்க விடாமல் தடுத்து வருகிறது.


‘பன்முக வளர்ச்சிக்கு உந்துதலாக பிரிக்ஸ் கூட்டமைப்பு இருக்கும்


வளரும் நாடுகளின் உரிமைகளை உள்ளடக்கிய பன்முகத் தன்மையுடன் கூடிய உலக வளர்ச்சிக்கு பிரிக்ஸ் கூட்டமைப்பு உந்து விசையாக இருக்கும் என பிரேசில் ஜனாதிபதி லூலா தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சி மாநாடு பிரேசிலில் நடைபெற உள்ள நிலையில் சர்வதேச அமைப்புகள், சுகாதாரம், காலநிலை மாற்ற நடவடிக்கை, வர்த்தகம், செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி உள்ளிட்டவற்றை குறித்து இம்மாநாடு தீவிரமாக விவாதிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது