tamilnadu epaper

ஹோலி பண்டிகை தினத்தில் முஸ்லிம்கள் வெளியே வரக்கூடாது' * பா.ஜ. பகிரங்க மிரட்டல்

ஹோலி பண்டிகை தினத்தில் முஸ்லிம்கள் வெளியே வரக்கூடாது'   * பா.ஜ. பகிரங்க மிரட்டல்


ஹோலி பண்டிகை தினத்தில் முஸ்லிம்கள் வெளியே வரக்கூடாது என்று பா.ஜ. எம்.எல்.ஏ. பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.

வருகிற ௧௪ம் தேதி வெள்ளிக்கிழமை ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தி பேசும் வட மாநிலங்களில் வண்ணப் பொடிகளை துாவி கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைவார்கள். இதை பொறுத்துக் கொள்பவர்களும் உண்டு. பல இடங்களில் இதனால் தகராறுகள் வெடிப்பதும் உண்டு.

  அதே சமயத்தில் வெள்ளிக்கிழமை தோறும் முஸ்லிம்கள் கண்டிப்பாக மசூதிகளுக்குச் சென்று தொழுகை நடத்துவார்கள். இப்போது ரம்ஜான் மாதம் என்பதால் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்துவதை விடமாட்டார்கள். ஆனால் இந்த ஆண்டு வௌ்ளிக்கிழமையே ஹோலி பண்டிகை நடப்பதால், முஸ்லிம்களுக்கு பீகார் பா.ஜ. எம்.எல்.ஏ., ஹரி பூசண் தாகூர் பச்சோல் பகிரங்க மிரட்டலை நேற்று வெளியிட்டார்.

 அதில்," ஹோலி பண்டிகை ஆண்டுக்கு ஒரு முறை தான் வரும். அது வண்ணங்களின் கொண்டாட்டம். இந்த நாளில் வண்ணப்பொடி துாவினால் முஸ்லிம்கள் கோபப்படலாம். அதனால் தான் சொல்கிறேன். உங்களுக்கு பரந்த மனது இருந்தால், வீட்டை விட்டு வெளியே வாருங்கள்... இல்லாவிட்டால் வீட்டிலேயே இருந்து விடுங்கள். எந்த மோதலுக்கும் இடம் இருக்காது. ஆண்டுக்கு ௫௨ வெ ள்ளிக்கிழமைகள் வருகின்றன. கங்கா ஜமுனா கலாச்சாரம்.. சகோதரத்துவம் பற்றி அவர்கள் பேசுகின்றனர். எனவே இந்துக்களுக்காக 14ம் தேதி வெள்ளிக்கிழமை மட்டும் ஒரு நாள் தொழுகையை முஸ்லிம்கள் விட்டுத் தர வேண்டும்." என்று கூறி உள்ளார்.

ஆர்ஜேடி எதிர்ப்பு

எம்.எல்.ஏ.வின் இந்த மிரட்டலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் பதிலடி கொடுத்துள்ளார். முஸ்லிம் சகோதரர்கள் எல்லாம் ௧௪ம் தேதி வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று பா.ஜ.எம்.எல்.ஏ. மிரட்டுகிறார். பீகார் என்ன உங்கள் அப்பாவின் மாநிலமா... யார் இவர்.... எப்படி இது போன்று மிரட்டல் விடுக்கலாம்.. முதல்வரே எந்த உணர்வும் இன்றி இருக்கிறார். தலித் பெண்கள் உரிமைகளுக்காக போராடினால் முதல்வர் திட்டுகிறார். பா.ஜ. எம்.எல்.ஏ.வை அடக்கி வைக்க முதல்வருக்கு துணிச்ல் இருக்கிறதா....அவருக்கு நாற்காலியை காப்பாற்றிக்கொள்வதைத் தவிர வேறு எதுவும் தெரியாது. பா.ஜ.வன்முறையை துாண்டுகிறது.

இது பீகார். ஒவ்வொரு முஸ்லிமையும் ஐந்து இந்துக்கள் பாதுகாப்போம். நாங்கள் ஆட்சியில் இருந்தாலும் சரி... இல்லாவிட்டாலும் சரி.. பா.ஜ. கனவு நிறைவேற விட மாட்டோம். முதல்வருக்கு தைரியம் இருந்தால், அந்த எம்.எல்.ஏ.வை சட்டசபையில் மன்னிப்புகேட்கச் செய்ய வேண்டும்... என்று தேஜஸ்வி யாதவ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.