அக்டோபர் 28, 29-ம் தேதிகளில் கோவில்பட்டி, தென்காசிக்கு முதல்வர் வருகை

அக்டோபர் 28, 29-ம் தேதிகளில் கோவில்பட்டி, தென்காசிக்கு முதல்வர் வருகை



தூத்துக்குடி / தென்காசி: தூத்​துக்​குடி மாவட்​டம் கோவில்​பட்டி இளை​யரசனேந்​தல் சாலை​யில் புதி​தாக திமுக அலு​வல​கம் கட்டப்பட்​டுள்​ளது. இதன் வளாகத்​தில் முன்​னாள் முதல்​வர் கருணாநி​தி​யின் வெண்கல முழு உரு​வச் சிலை நிறு​வப்​பட்​டுள்​ளது.


வரும் 28-ம் தேதி மாலை விமானம் மூல​மாக மதுரை வருகை தரும் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின், அங்​கிருந்து சாலை மார்க்​க​மாக கோவில்​பட்​டிக்கு வந்​து, மாலை 6 மணி​யள​வில் திமுக அலு​வல​கத்​தை​யும், கருணாநி​தி​யின் சிலை​யை​யும் திறந்து வைக்​கிறார்.


பின்​னர், தென்​காசி​யில் வரும் 29-ம் தேதி காலை நடை​பெறும் அரசு விழா​வில் பங்​கேற்​று, முடிவுற்ற திட்​டப் பணி​களை திறந்​து​வைப்​பதுடன், புதிய திட்​டப் பணி​களுக்கு அடிக்​கல் நாட்​டி, பயனாளி​களுக்கு நலத்​திட்ட உதவி​களை வழங்​கு​கிறார்.


விழா முடிந்த பின்​னர் சாலை மார்க்​க​மாக மதுரைக்​குச் செல்​கிறார். இந்த விழாவுக்​காக தென்​காசி இலத்​தூர் ரவுண்​டா​னா​வில் இருந்து ஆய்க்​குடி செல்​லும் சாலை​யில் உள்ள காலி​யிடத்​தில் பந்​தல், மேடை அமைக்​கும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News