பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்ய வரும் மத்தியக் குழு தமிழக விவசாயிகளுக்கு உதவும்: நயினார் நாகேந்திரன் உறுதி
Oct 26 2025
10
மதுரை: பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரை விமான நிலையத்தில் செய்தியா ளர்களிடம் நேற்று கூறியதாவது: நெல் கொள்முதல் குறித்து எந்த விவசாயியும் புகார் செய்யவில்லை என்று துணை முதல்வர் உதயநிதி கூறுகிறார்.
யார் மீது புகார் கொடுக்க முடியும்? மூட்டைக்கு ரூ.40 கமிஷன் கேட்கின்றனர். தமிழகம் முழுவதும் விவசாயத்துக்காக ரூ.5 ஆயிரம் கோடி செலவு செய்ததாக சொல்கிறார்கள்.
எங்கே செய்தனர் என்பதுதான் கேள்வியாக உள்ளது. தமிழகத்தில் பயிர் பாதிப்புகளை ஆய்வு செய்ய வரும் மத்தியக் குழு, பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உதவி செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?