அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின்படி அமெரிக்காவைச் சேர்ந்த சியாட்டில் இந்தியா டீம் மூலம் மாணவிக்கு கல்வி உதவித்தொகை
Sep 02 2025
49
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டுதலின்படி அமெரிக்காவைச் சேர்ந்த சியாட்டில் இந்தியா டீம் மூலம் மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. நேற்று செப்டம்பர் 1 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இதற்கான ஆணையினை அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் முனைவர் எஸ்.அறிவுடைநம்பி மாணவி ஆர். விருத்திகாவிடம் வழங்கினார். இந்நிகழ்வில் உள்தர கட்டுப்பாட்டு மைய, இணை இயக்குநர்கள் எஸ் ரமேஷ்குமார், எஸ்.கார்த்திக்குமார் மற்றும் மாணவர் சேர்க்கை இயக்குனர் பாலபாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வு ஏற்பாடுகளை திட்டஇணை ஒருங்கிணைப்பாளர் டாக்டர் மித்ரா செய்திருந்தார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?