அதிகரித்து வரும் எண்ம கைது சம்பவங்கள்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
Oct 19 2025
11

நாட்டில் அதிகரித்து வரும் எண்ம கைது (டிஜிட்டல் அரஸ்ட்) மோசடிகளைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் மத்திய புலனாய்வு முகமைக்கு (சிபிஐ) நோட்டீஸ் பிறப்பித்து உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
எண்ம கைது மூலம் ரூ. 1.05 கோடியை மோசடியாளா்களிடம் இழந்த ஹரியாணா மாநிலம் அம்பாலாவைச் சோ்ந்த 73 வயது மூதாட்டி தலைமை நீதிபதி பி.ஆா். கவாய்க்கு எழுதிய கடிதத்தை, தானாக முன்வந்து வழக்காக பதிந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூரிய காந்த், ஜாய்மால்யா பாக்சி ஆகியோா் அடங்கிய அமா்வு வெள்ளிக்கிழமை இந்த நோட்டீஸைப் பிறப்பித்தது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
உச்சநீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற உத்தரவுகளை நீதிபதிகளின் கையொப்பத்துடன் போலியாக தயாரித்து மூத்த குடிமக்கள் உல்பட அப்பாவி மக்களை எண்ம கைது செய்து நடைபெறும் மோசடிகள், சட்டத்தின் ஆட்சியை மட்டுமின்றி நீதித் துறை மீது மக்கள் வைக்கும் நம்பிக்கையின் அடித்தளத்தையே பாதிக்கக் கூடியதாகும். இத்தகைய நடவடிக்கை, நீதிமன்றங்களின் மீதான நேரடி தாக்குதலாகும்.
இத்தகைய மிகத் தீவிர குற்றங்களை, ஏமாற்றுதல் அல்லது இணைய குற்றங்கள் போன்று சாதாரண குற்றமாக கருத முடியாது.
இந்த எண்ம கைது மோசடி, நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றிருப்பது ஊடகச் செய்திகளில் பதிவாகியுள்ளது. அதிகரித்து வரும் இந்த மோசடிகளைத் தடுக்க மத்திய, மாநில போலீஸாரிடைய ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம் என நீதிமன்றம் கருதுகிறது. இதுதொடா்பாக, பதிலளிக்க மத்திய அரசு மற்றும் சிபிஐ-க்கு நோட்டீஸ் பிறப்பிக்க அறிவுறுத்தப்படுகிறது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?