இந்த தூண் விழுந்தால் உலகமே அழிந்து விடும்...!
🌒 மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே மாவட்டத்தில் அமைந்துள்ள கிரேஷ்வர் எனும் கிராமத்தில் காணப்படும் ஒரு சிறப்பு வாய்ந்த கோவில்தான் 'ஹரிஷ்சந்திரகட் கோவில்". இந்த கோவில் மிகவும் பழமை வாய்ந்ததாகும்.
🌒 இது 6-ஆம் நூற்றாண்டில் கலாசூரி பேரரசால் கட்டப்பட்டதாகும். இந்த கோவிலுக்கு அருகில் தான் 'கேதாரேஸ்வர்" என்ற இந்த அதிசய குகைக் கோவில் உள்ளது.
🌒 இந்த குகைக்கு உள்ளே சென்றால் நீரால் சூழப்பட்ட 5 அடி உயர சிவலிங்கத்தைக் காணலாம். அதுமட்டுமல்லாது லிங்கத்தை சுற்றியுள்ள தண்ணீரைக் கடந்துதான் லிங்கத்தை அடைய வேண்டும்.
🌒 சிவலிங்கத்தை சுற்றி காணப்படும் நீர் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் காரணத்தினால் இதை கடந்து லிங்கத்தை அடைவது சற்று கடினம். மழைக் காலங்களில் குகைக்கு அருகில் கூட செல்ல முடியாது.
🌒 சிவலிங்கத்தை சுற்றி நான்கு தூண்கள் இருந்துள்ளன. இவற்றில் மூன்று தூண்கள் ஏற்கனவே சேதமடைந்து விழுந்த நிலையில் ஒரே ஒரு தூண் மட்டுமே உள்ளது. இந்த தூண் எப்போது சேதமடைந்து கீழே விழுகிறதோ அன்று உலகம் அழிந்துவிடும் என்று நம்பப்படுகிறது.
🌒 சிவலிங்கத்தை சுற்றியுள்ள நான்கு தூண்களை 'சத்ய யுகம், த்ரேதா யுகம், த்வாபர யுகம், கலியுகம்" ஆகிய நான்கு யுகங்களை தெளிவுப்படுத்துவதாக கூறப்படுகின்றது.
🌒 ஒவ்வொரு யுகமும் முடிவடையும் சந்தர்ப்பத்தில் ஒவ்வொரு தூணாக இடிந்து விழும். அதன்படி தற்போதைய 3 தூண்கள் இடிந்துவிட்ட நிலையில் கலியுகத்தின் முடிவில் நான்காவது தூணும் இடிந்து உலகம் அழிந்துவிடும் என நம்பப்படுகிறது.
Thanks and regards
A s Govinda rajan
. பிரசாதமாக வழங்கப்படும் தங்கம் !
👉 மத்தியப்பிரதேச மாநிலத்தில் வடமேற்கு பகுதியில் அமைந்திருக்கிறது ரத்லம். ரத்னபுரி என்ற வரலாற்று பெயர்கொண்ட இந்த ஊர் தங்கத்திற்கு பெயர்பெற்றது.
👉 இங்குள்ள மகாலஷ்மி கோவிலில் தங்கம் பரிசாக பக்தர்களுக்கு வழங்குகிறார்கள்.
👉 பக்திக்காக மட்டுமல்லாது, எளியோர்களின் வறுமையினை நீக்குவதற்கு கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு வருவோர் தாங்கள் செலுத்தும் காணிக்கையினை பணமாக செலுத்துவதில்லை.
👉 காணிக்கை செலுத்துபவர்கள் தங்களால் இயன்ற அளவிற்கு தங்கம் மற்றும் வெள்ளிகளாக காணிக்கையினை செலுத்துகின்றனர்.
👉 வருடம் முழுவதும் பக்தர்கள் செலுத்தும் தங்கம், வெள்ளியானது மலை போன்று குவித்து வைக்கப்பட்டிருக்கும்.
👉 மற்ற கோவில்களில் சேரும் காணிக்கையை அந்தந்த கோவில்களின் திருப்பணிகளுக்காக செலவு செய்வார்கள்.
👉 ஆனால், இக்கோவிலில் சேர்ந்த காணிக்கையான தங்கம் மற்றும் வெள்ளியினை தீபாவளி நாளன்று கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொடுக்கப்படுகிறது.
👉 இதுபோல் ஒவ்வொரு வருடமும் தீபாவளியன்று பக்தர்களுக்கு பிரசாதமாக தங்கம் வழங்கப்படுகிறது. இந்த தங்க பிரசாதம் தினந்தோறும் வழங்கப்படுவதில்லை.
👉 இங்கு பிரசாதமாக தரப்படும் தங்கத்தை மக்கள் இறைவனின் அருளாக பார்க்கின்றனர். அதுமட்டுமின்றி இந்த தங்க பிரசாதத்தை யாரும் விற்பது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks and regards
A s Govinda rajan
நீரில் நனையும் சிவலிங்கம்..!
அருள்மிகு ஸ்ரீஜம்புகேஸ்வரர் கோவில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகிலுள்ள திருவானைக்காவல் அமைந்துள்ளது.
🌊 இந்த ஆலயத்தில் ஜம்புகேஸ்வரரும், அகிலாண்டேஸ்வரியும் அருள்புரிகின்றனர். இக்கோவிலின் கோபுரமும் மிக அழகாக காட்சியளிக்கும்.
🌊 இக்கோவில் மூலவர் ஸ்ரீஜம்புகேஸ்வரர் லிங்கத்தைச் சுற்றி எப்பொழுதும் தண்ணீர் ஊற்றிக்கொண்டேயிருக்கும்.
🌊 லிங்கம் இருக்குமிடம் தரைமட்டத்திற்க்குக் கீழே இருப்பதால் எப்போதும் தண்ணீர் கசிவு இருந்துகொண்டே இருக்கும்.
🌊 லிங்கம் தண்ணீரில் மூழ்கி மறையாமலிருக்க நீரை அடிக்கடி முகந்து வெளியேற்றிக் கொண்டிருப்பார்கள். இந்த சிவலிங்கத்தை கருவறையின் மேற்குப் பகுதியில் உள்ள சாளரத்தின் வழியாகத் தான் தரிசிப்பார்கள்.
🌊 இக்கோவில் முற்றிய கோடையில், காவேரி வறண்டிருக்கும் நேரங்களிலும், இந்நீர்க்கசிவு வற்றுவதில்லை என்பது இதன் சிறப்பாகும்.
🌊 ஐப்பசி மாதம் மழைக்காலம் என்பதால், வழக்கத்திற்கு மாறாக கருவறைக்குள் தண்ணீர் அதிகமாக இருக்கும். வைகாசி மாதத்தில் தண்ணீர் ஓரளவிற்கு குறைவாக காணப்படும்.
Thanks and regards
A s Govinda rajan
நிறம் மாறிக்கொண்டே இருக்கும் அதிசய கோவில் குளம்!
🌊 காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரிலிருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் காணப்படும் இடம் கீர் பவானி கோவில். இக்கோவிலை சுற்றியுள்ள மரங்களும், சுனையும் பார்ப்பவரை கவர்ந்திழுக்கும்.
🌊 இக்கோவிலில் பக்தர்கள் காணிக்கை அளிக்கும் கீர் என்ற இனிப்பு பதார்த்தத்தையும், பாலையும் கொண்டு இக்கோவில் இப்பெயரை பெற்றது. இந்த கோவிலில் பவானி அம்மன் சிவனோடு அருள்பாலிக்கிறார்.
🌊 இந்த கோவிலில் உள்ள குளத்தின் நீரில் பக்தர்கள் அபிஷேகம் செய்வது வழக்கம். இந்த குளத்தில் இருக்கும் நீரானது பச்சை, இளஞ்சிவப்பு, கறுப்பு, நீலம் என பல்வேறு நிறங்களில் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கிறது.
🌊 எந்த நிறத்தில் நீர் மாறினாலும் பிரச்சனை இல்லை. ஆனால் குளத்தின் நீர் கறுப்பு நிறத்தில் மட்டும் மாறவே கூடாது என்கிறார்கள். குளத்தின் நீர் கறுப்பு நிறத்தில் மாறினால் அது அழிவிற்கான அறிகுறியாம்.
🌊 ஆகையால், நீர் கறுப்பு நிறத்தில் மாறும் அறிகுறி தெரிந்தாலே சுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்படுமாம். எவ்வளவு பெரிய ஆபத்தையும் முன்கூட்டியே உணர்த்தும் ஒரு அதிசய குளமாகவே இது பார்க்கப்படுகிறது.
Thanks and regards
A s Govinda rajan
அபிஷேக பால் நீல நிறமாக மாறும் அதிசய கோவில்...!
🌟 தஞ்சை மாவட்டம் கும்பகோணத்திற்கு கிழக்கே 6 கிலோ மீட்டர் தொலைவில் இந்த திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவில் ராகு தோஷ பரிகார தலமாக விளங்குகிறது.
🌟 நாக அரசனாகிய ராகு பூஜித்த காரணத்தால் இத்தலத்துக்கு திருநாகேஸ்வரம் என்ற பெயர் வந்தது.
🌟 இத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் இறைவன் திருநாகநாத சுவாமி, இறைவி பிறையணியம்மன், தீர்த்தம் சூரிய புஷ்கரணியாகும், தலவிருட்சம் செண்பக மரம் ஆகும்.
🌟 மேலும் இவருக்குகந்த நிறம் நீலம் என்பதால் அணிகின்ற ஆடை மட்டுமல்ல, இவருக்குச் செய்கின்ற பாலாபிஷேகத்தின்போது தலை மீது ஊற்றும் பால் தலையிலிருந்து வழிந்து உடல் மீது வரும் போது பாலின் நிறமும் நீலமாகி விடுகின்ற அதிசயத்தைப் பார்க்கலாம்.
🌟 இங்கு இராகுவினால் ஏற்படக் கூடிய தோஷங்கள் அகல இராகுவுக்குப் பாலாபிஷேகம் செய்கின்றனர். ராகுவின் மேனியில் பாலாபிஷேகம் செய்யும்போது பால் நீலநிறமாக மாறுவது தனிச்சிறப்பாகும்.
🌟 கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி நாளில் அம்பாளின் பாதத்தில் நிலவு ஒளிபட்டுப் பாதத்தில் இருந்து தலைக்குச் செல்லும் காட்சி அற்புதமாகும்.
Thanks and regards
A s Govinda rajan
Kodambakkam Chennai 600024