news Breaking News
clock

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு: 35 ஆக உயர்ந்த பலி: 393 பேர் காயம்!

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு: 35 ஆக உயர்ந்த பலி: 393 பேர் காயம்!


 

ஜப்பானில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் நாடு முழுவதும் இதுவரை 35 பேர் உயிரிழந்துள்ளனர்.


கடந்த இரண்டு வாரங்களாக வடக்கு ஜப்பானில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகின்றது. புதன்கிழமை நிலவரப்படி 15 மாகாணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.


பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுமார் 6.5 அடி வரை பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. பனி தொடர்பான பல்வேறு சம்பவங்களில் தொடர்ந்து உயிரிழப்புகள் பதிவாகி வருகின்றது.


வடக்கு ஜப்பானின் நீகாட்டா மாகாணத்தில் 12 பேரும், உவோனுமா நகரில் வீட்டின் கூரை இடிந்து விழுந்து 50 வயதுடைய முதியவர் உள்பட இதுவரை 35 பேர் பலியாகியுள்ளனர். அங்குக் குடியிருப்புகள், அலுவலக கட்டடங்கள் என எங்கும் பனி சூழ்ந்து காணப்படுகிறது.


சீதோஷ்ண நிலை மோசமாகக் காணப்படும் அதே சூழலில் அங்கு மின்வெட்டும் நிலவுவதால் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வாகனங்கள் இயக்க முடியாத நிலையில் பலரும் நடந்தே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.


மேலும், அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் போவதால் சிரமத்தையும் சந்தித்து வருகின்றனர். பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. பொது போக்குவரத்தும் முற்றிலும் தடைப்பட்டுள்ளது.


கட்டடங்களின் மேற்கூரையின் படிந்திருக்கும் பனியை அகற்றும் பணியின்போதும், பனியில் புதைந்தும் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர், அதிக உயிரிழப்பானது அமோரி மாகாணத்தில் பதிவாகியுள்ளது.


நாடு முழுவதும் 393 பேர் காயமடைந்துள்ளனர். இதில் 126 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். அவர்களில் 42 பேர் நீகாட்டாவைச் சேர்ந்தவர்கள். பதினான்கு வீடுகள் சேதமடைந்துள்ளன, இதில் மூன்று நீகாட்டாவிலும், எட்டு அமோரி மாகாணத்திலும் பதிவாகியுள்ளது.


தீ மற்றும் பேரிடர் மேலாண்மை முகமையின்படி, முந்தைய ஆண்டு குளிர்காலத்தின் ஆறு மாதங்களில் 68 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. வரும் வார இறுதியில் மேலும் பனிப்பொழிவு நிலவ வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News