அதிமுக பேரூராட்சி தலைவி பதவி பறிப்பு செல்லும் ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு

அதிமுக பேரூராட்சி தலைவி  பதவி பறிப்பு செல்லும்  ஐகோர்ட் அதிரடி தீர்ப்பு


நாகர்கோவில், செப்.1-

மதம் மாறியதை மறைத்து பேரூராட்சித் தலைவர் தேர்தலில் வென்ற அதிமுக பெண் கவுன்சிலரின் பேரூராட்சித் தலைவர் பதவியை பறித்தது சரியே என, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


கன்னியாகுமரி மாவட்டம், தேரூர் பேரூராட்சி தலைவர் அதிமுகவைச் சேர்ந்த அமுதாராணி. இவர் தேரூர் 2வது வார்டில் போட்டியிட்டு வென்றவர்.அந்தத் தலைவர் பதவி பட்டியல் இனத்தவருக்கு ஒதுக்கப்பட்டது. ஆனால் அமுதாராணி, 2005ம் ஆண்டில் கிறிஸ்தவராக மதம் மாறி திருமணம் செய்தவர். இந்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் வேறு மதம் மாறினால், அவர் பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீடு பலனை பெற முடியாது. மதம் மாறியதை மறைத்து அவர் வெற்றி பெற்றதால் தலைவர் பதவியில் இருந்து அவரை தகுதி நீக்கம் செய்யக்கோரி, திமுக கவுன்சிலர் அய்யப்பன் என்பவர், ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஆவணங்களையும் தாக்கல் செய்தார். 

இந்த மனுவை தனி நீதிபதி விக்டோரியா கவுரி விசாரித்து, அமுதாராணியை தலைவர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்வதாக உத்தரவிட்டார். இதை எதிர்த்து அமுதராணி மேல்முறையீடு செய்தார். இதனை நீதிபதிகள் ஜி.ஆர் சுவாமிநாதன், கே.ராஜசேகர் அமர்வு விசாரித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவைஉறுதி செய்தனர்.

  இந்த வழக்கின் உண்மையான பிரச்சினை அமுதாராணி கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொள்கிறாரா? அவர் ஞானஸ்நானம் பெற்றாரா? என்பதுதான். மனுதாரர் ஞானஸ்நானம் பெற்றுக்கொண்டது உறுதிப்படுத்தப்படுகிறது. ஒருவர் ஒரு மதத்திலிருந்து மற்ற மதத்துக்கு மாறுவது என்பது அரசியலமைப்பின் அடிப்படை உரிமையாகும். ஆனால், ஞானஸ்நானத்துக்குப் பிறகு புதிய அடையாளத்தை மறைத்து, அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை அனுபவிக்கும் நோக்கத்துக்காக, பட்டியல் இன சமூக நிலையில் தொடரும்போது சிக்கல் ஏற்படுகிறது. இந்த வழக்கில் மேல்முறையீட்டு மனுதாரர் கிறிஸ்தவ மதத்தை தழுவி உள்ளார் என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவு உறுதி செய்யப்பட்டு, மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதிபதிகள் உத்தரவில் கூறிஉள்ளனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%