அவளுக்கு
உலகமே இன்னும்
விளையாட்டு பொம்மை,
அதை வேட்டைக்காடாக
மாற்றி விட்ட
நீ நடமாடும் நரகம்!
மனநிலை மங்கிய
சிறுமியடா..
அவளிடம்
“ஆம்” இல்லை...
“இல்லை” கூட இல்லை…
அதுவே உனக்கு
வசதியான மௌனமாகிப்
போனதடா!
அந்த மௌனத்தை
சம்மதமென மொழிபெயர்த்த
உன் மொழி
மனிதக் குரலல்ல...
மிருகத்தின் குரல்!
அவள் வயிற்றில்
வளரும் குழந்தை
காதலின் சாட்சி அல்ல
உன் காமத்தின்
குற்றச்சான்று!
இனி உன்னை ஆணென்று
சொல்லிக் கொள்ளாதே..
உன் ஆண்மை
அங்கே இறந்து போனது!
சட்டம் தாமதிக்கலாம்,
ஆனால்
வரலாறு மறக்காது!
காமுகனென்று
கல்வெட்டில் பதிக்கும்
உன் பெயரை!
------
முகில் தினகரன்
கோயமுத்தூர்
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%