கவிஞர் இரா .இரவி !
உதிரும் இலைகளுக்காக மரங்கள்
ஒருபோதும் வருந்துவதே இல்லை !
பச்சையம் மறைந்து காய்ந்தாலும்
படபடப்பு என்றும் வருவதில்லை !
இழப்புகளுக்காக கவலை கொள்வதில்லை
இருப்பை தக்க வைத்து நிமிரும் !
இலைகளை காற்றும் உதிர்ப்பதுண்டு
இலைகள் தானாகவும் உதிர்வதுண்டு !
போனால் போகட்டும் போடா என்ற
பாடல் மனநிலையே மரங்களுக்கு !
மழை வந்தால் உடன் துளிர்க்கும்
மறுபடியும் இலைகள் முளைக்கும் !
தன்னம்பிக்கை எப்போதும் இழப்பதில்லை
தானாகவே மீண்டும் உறுதியுடன் துளிர்க்கும் !
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%