அனைத்து ஓய்வூதியர் நல அமைப்பு சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

அனைத்து ஓய்வூதியர் நல அமைப்பு சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு பேரூராட்சி நகராட்சி மாநகராட்சி அனைத்து ஓய்வூதியர் நல அமைப்பு சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் மதுரை மாநகராட்சி ஆலுவலக வளாகத்தில் இன்று 11.12.25 காலை மாநில துணைத் தலைவர் எஸ்.சக்திவேல் தலைமையில் நடைபெற்றது.ச.வெ.பிரகதம்மாள் வரவேற்புரையாற்றினார்.சங்கத்தின் மாநில தலைவர் பா.இராமமூர்த்தி துவக்கி வைத்தார்.தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் முனைவர் சு கிருஷ்ணன், மாவட்ட தலைவர் பரமேஸ்வரன், மாவட்ட செயலாளர் அ.பால்முருகன் TNRDPA மாநில தலைவர் டி.எஸ்.வி மூர்த்தி, சி.எம்.மகுடேஸ்வரன், பஞ்சவர்ணம், எஸ்.விஜயன், ஜி.பிரேம் குமார், ஜெ.இளங்கோ,எஸ்.யாகூப்கான்,எஸ்.திருவள்ளுவன் உள்ளிட்ட ஓய்வூதியர் சங்கத்தின் தலைவர்கள் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில தலைவர் என் ஜெயச்சந்திரன் நினைவுரையாற்றினார்.தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட, வட்டக் கிளை நிர்வாகிகள் மற்றும் மதுரை மாநகராட்சி ஓய்வூதியர்கள் நலச் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட 150 பேர் கலந்து கொண்டனர். இறுதியில் ஆர்.கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%