செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
இராமனூத்து அரசுப்பள்ளியில் பாரதியார் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்
Dec 11 2025
22
எட்டையபுரம் அருகே உள்ள இராமனூத்து அரசு ஆரம்பப்பள்ளியில் பாரதியாரின் 144 வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு பள்ளி இடைநிலை ஆசிரியர் இந்திரா தலைமை தாங்கினார்.பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் வெண்ணிலா முன்னிலை வகித்தார்.பள்ளி தலைமையாசிரியர் மு.க.இப்ராஹிம் பாரதியாரைப் போன்று வேடமணிந்து அவரின் சிறப்புகள் பற்றி மாணவர்களுக்கு
எடுத்துரைத்தார்.மாணவ மாணவியர்கள் பாரதியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.முன்னதாக பாரதியார் பற்றிய கட்டுரை பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.விழா முடிவில் வாணி நன்றி கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%