சென்னை: நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 1,020 கோடி ரூபாய் ஊழல் புகார் தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலர் மற்றும் டிஜிபிக்கு அமலாக்கத் துறை மீண்டும் கடிதம் அனுப்பி யுள்ளது. அதில், அமைச்சர் கே.என்.நேரு தனது உறவினர்கள் மூலம் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து மொத்த ஒப்பந்த மதிப்பில் 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை லஞ்சமாக வசூ லித்ததாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு பதிலடியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசுகையில், எதிரிகள் மத்திய புலனாய்வு அமைப்புகளை தங்களுக்கு எதிராகப் பயன் படுத்தி தினமும் பொய்களைப் பரப்பி வருவதாகவும், இதை எதிர்கொள்ள கட்சியினர் தங்கள் பலத்தை சரியாகப் பயன் படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?