செய்திகள்
தமிழ்நாடு-Tamil Nadu
செந்தில் பாலாஜிக்கு நிபந்தனையில் தளர்வு புதுதில்லி: பண மோசடி வழக்கில் விசாரிக்கப்படும்
Dec 10 2025
17
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதி மன்றம் ஜாமீன் நிபந்தனைகளில் தளர்வு அளித்துள்ளது. போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி லஞ்சம் பெற்ற வழக்கில் வாரம் இருமுறை ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 31 முறைக்கும் மேல் ஆஜரான செந்தில் பாலாஜி, நிபந்தனையைத் தளர்த்தக் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். தலைமை நீதிபதி சூர்யகாந்த் தலை மையிலான அமர்வு, தேவைப்படும் பட்சத்தில் மட்டும் நோட்டீஸ் அளித்து ஆஜராக உத்தரவிடலாம் என்று தீர்ப்ப ளித்துள்ளது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?
50%
50%