ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான அமெரிக்க ஓபன் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி நியூயார்க் நகரில் தொடங்க உள்ளது. இந்த தொடரில் வழக்கத்துக்கு மாறாக தகுதிச் சுற்றுடன் கலப்பு இரட்டையர் ஆட்டங்களும் முன்கூட்டியே தொடங்கின. பொதுவாக கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒற்றையர் பிரிவு ஆட்டங்கள் தொடங்கி 2ஆவது, 3ஆவது சுற்று நடைபெறும் போதுதான் கலப்பு இரட்டையர் பிரிவு சுற்று ஆட்டங்கள் தாமதமாக தொடங்கும். ஆனால் இந்த முறை அமெரிக்க ஓபனில் மட்டும் முன்னதாகவே கலப்பு இரட்டையர் ஆட்டங்கள் தொடங்கி விட்டன. இந்நிலையில், இந்திய நேரப்படி வியாழக்கிழமை அன்று நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் போலந்தின் ஸ்வியாடெக் - நார்வேயின் ரூத் ஜோடி, இத்தாலியின் சாரா - ஆந்திரே ஜோடியை எதிர்கொண்டன. தொடக்கம் முதலே பரபரப்பாக நடை பெற்ற இந்த ஆட்டத்தில் 6-3, 5-7, 10-5 என்ற செட் கணக்கில் ஸ்வியாடெக் - ரூத் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?