அமெரிக்க முத்தமிழ் இலக்கியக் குழுமங்கள் மற்றும் உலக முத்தமிழ்க் கூட்டமைப்பின் பிரம்மாண்டமான 7ஆவது உலக முத்தமிழ் மாநாடு
அமெரிக்க முத்தமிழ் இலக்கியப் பேரவைக் குழுமங்கள் மற்றும் உலக முத்தமிழ்க் கூட்டமைப்பு இணைந்து எதிர்வரும் அக்டோபர் 25, 36 சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் இரண்டுநாள் உலக முத்தமிழ் மாநாடு நடத்துகின்றன . இரண்டு நாள் மாநாடு சென்னை வேப்பேரியில் உள்ள சால்வேசன் ஆர்மி சென்டரில் நடைபெறுகிறது . முதல் நாள் மாநாட்டில் ஆய்வுக் கோவை வெளியிடப்படுகிறது . மருத்துவர் ஜெய . ராஜமூர்த்தி சிறப்புரையாற்றுகிறார் . இயக்குனர் லிங்குசாமி , எழுத்தாளர் ஜெயபாஸ்கரன் , இயக்குனர் பிருந்தாசாரதி , கவிமாமணி ஆரூர் தமிழ்நாடன் ஆகியோர் கலந்துகொள்ள அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலை வேந்தர் தாழை இரா . உதயநேசன் தலைமையில் உலக முத்தமிழ் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் முனைவர் குறிஞ்சிவேந்தன் வரவேற்புரை நிகழ்த்துகிறார் . வேந்தர் ஆய்வு நூலை வெளியிட திருமதி . கலையரசி உதயநேசன் பெற்றுக்கொள்கிறார் . தொடர் நிகழ்வாக கவிஞர் ஆதிரா முல்லை அவர்கள் தலைமையில் மகளிர் கவியரங்கமும் கவித்திலகம் வெற்றிப்பேரொளி தலைமையில் பொதுக் கவியரங்கமும் நடைபெறுகிறது . விழாவில் இயக்குனர் யார் கண்ணன் அவர்களின் நூலினை இயக்குனர் இராஜகுமாரன் வெளியிட நடிகை தேவயானி இராஜகுமாரன் பெற்றுக்கொள்கிறார் . தாழை இரா . உதயநேசன் அவர்களின் நூல்களை இயக்குனர் சீனு இராமசாமி வெளியிடுகிறார் . முதல் நாள் விழாவில் அமெரிக்க முத்தமிழ்ப் பல்கலை மாணவர்களின் நூல்கள் , மற்றும் தொகுப்பு நூல்களை வெளியிட்டு முனைவர் ஹாஜாகனி அவர்கள் சிறப்புரையாற்ற முனைவர் கா . ந . கல்யாணசுந்தரம் முன்னிலை வகிக்கிறார் .
இரண்டாம் நாள் நிகழ்வில் பரதநாட்டியம் தொடங்கி முதலாவதாக முனைவர் ஓசூர் மணிமேகலை தலைமையில் சிறுவர் கவியரங்கம், இரண்டாவதாக கவிச்சுடர் கா . ந . கல்யாணசுந்தரம் தலைமையில் தன்முனைக் கவியரங்கம் , மூன்றாவதாக கவிஞர் கவிநிலா மோகன் தலைமையில் ஹைக்கூ கவியரங்கம் நடைபெறுகிறது . அடுத்த நிகழ்வாக அமெரிக்கா முத்தமிழ்ப் பல்கலையின் மதிப்புறு முனைவர் பட்டமளிப்பும் பல்கலை மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழாவும் நடைபெறுகிறது . டாக்டர் வி . ஜி . சந்தோசம் ஐயா அவர்கள் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார் . விழாவில் இறுதியில் அமெரிக்க முத்தமிழ் இலக்கியக் குழுமங்கள் , அமெரிக்க முத்தமிழ் தொலைகாட்சி விருதுகளை நடிகை முனைவர் ரேக்கா அவர்கள் வழங்குகிறார் .
விழாவில் பன்னாட்டு ஒருங்கிணைப்பாளர் திருமகள் சிறீபத்மநாதன் ,கவிஞர்கள் அமுதா தமிழ்நாடன் , கவிதா இராஜசேகர் , புலவர் அனந்தசயனம் , அருட்தந்தை பிலிப் சுதாகர் ,அமுதபாரதி , உமாபாரதி , உதயம் ராம் , அமுதா பாலகிருஷ்ணன் , மு . முருகேஷ், இலக்கியன் உள்ளிட்ட பல ஆளுமைகள் கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்க இருக்கிறார்கள் . அயலாக கவிஞர்கள் ரேணுகா பிரதீப்குமார் , ஆகாசவாணி சுமி , இரதி கமலநாதன் , சிவரூபி ,எம் . பி . எஸ் . பாலா , வனஜா உதயகுமாரன் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள் . விழா ஏற்பாடுகளை விரிவாக அமெரிக்க முத்தமிழ் இலக்கியக் குழும நிர்வாகிகள் முனைவர்கள் . ..முதற் பாவலர் , ஜோ . சம்பத்குமார் , விஜயகுமாரி ஆகியோர் செய்து வருகிறார்கள் .