வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கோலாகலம்!

வள்ளிமலை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கோலாகலம்!


 வேலூர், அக்.24 -

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வள்ளிமலையில் மிகவும் பிரசித்தி பெற்ற தெய்வானை -வள்ளி சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருவது வழக்கம். இந்நிலையில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு வெள்ளி கவசத்தில் ஸ்ரீ சுப்பிரமணியர் வள்ளி, தேவயானி சமேதரராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு ஸ்ரீ சுப்பிரமணியரை வழிபட்டனர். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டது. கந்த சஷ்டி விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் செயலாளர் திருநாவுக்கரசு, மேலாளர் ராஜ்குமார் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%