அயோத்தியை அடுத்து காசி, மதுரா மீதுதான் எங்கள் கவனம்...” - யோகி ஆதித்யநாத்

அயோத்தியை அடுத்து காசி, மதுரா மீதுதான் எங்கள் கவனம்...” - யோகி ஆதித்யநாத்


 

லக்னோ: “அயோத்தி ராம ஜென்ம பூமி விவகாரத்தை அடுத்து, காசி மற்றும் மதுராவில் உள்ள சர்ச்சைக்குரிய மசூதிகளுக்கு எதிராகவும் எங்கள் கவனம் இருக்கும்” என்று யோகி ஆதித்யாநாத் தெரிவித்துள்ளார்.


ஆங்கிலப் பத்திரிகை ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்ற உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாநாத், பின்னர் பல்வேறு கேள்வகளுக்குப் பதில் அளித்தார். அப்போது, அயோத்திக்குப் பிறகு, காசி, மதுரா விவகாரங்கள் எழுப்பப்படுமா என்ற கேள்விக்கு, "நாங்கள் எல்லா இடங்களுக்கும் செல்வோம். அங்கு (காசி மற்றும் மதுரா) நாங்கள் ஏற்கெனவே சென்றுவிட்டோம்" என தெரிவித்தார்.


உலகப் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலை ஒட்டி ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி, கோயில் நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக வழக்கு உள்ளது. இதேபோல், கிருஷ்ணர் பிறந்த மதுராவில் உள்ள கோயிலை ஒட்டி ஷாஹி ஈத்கா மசூதி உள்ளது. இந்த மசூதியும், கிருஷ்ணர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக வழக்கு உள்ளது.


இவ்விரு பகுதிகளில் இருந்தும் இவ்விரு மசூதிகளும் அகற்றப்பட வேண்டும் என கோரி இந்துக்கள் தரப்பில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.


உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக பதவியேற்று எட்டு ஆண்டுகள் நிறைவடைந்தது குறித்த கேள்விக்கு பதில் அளித்த யோகி ஆதித்யநாத், "உத்தரப் பிரதேசம் நாட்டின் மிகப் பெரிய மாநிலம். எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு பணியாற்ற எங்கள் கட்சி எனக்கு வாய்ப்பளித்துள்ளது.


இந்த எட்டு ஆண்டுகளில் உத்தரப் பிரதேசத்தில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக நான் இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என தெரிவித்தார்

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%