ஆடவர் இளையோர் உலகக்கோப்பை ஹாக்கி இந்தியா (தமிழ்நாடு) 2025
Dec 07 2025
31
அரையிறுதியில் ஸ்பெயின்
21 வயதிற்குட்பட்டோருக்கான ஆடவர் இளை யோர் உலகக்கோப்பை ஹாக்கி தொடரின், 14ஆவது சீசன் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களான சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, பெல்ஜியம், அர்ஜெண்டினா, நெதர்லாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், நியூஸிலாந்து, ஸ்பெயின் அணிகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றன. இந்நிலையில், வெள்ளியன்று சென்னை ராதாகிருஷ்ணன் மைதானத்தில் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் காலிறுதி ஆட்டத்தில் நியூஸி லாந்து - ஸ்பெயின் அணிகள் மோதின. முதல் கால் பகுதியி லேயே 3 கோல்கள் விளாசி ஸ்பெயின் பிரம்மாண்ட முன்னிலை பெற்றது. எனினும் பதிலுக்கு கோலடிக்க நியூஸி லாந்து அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினர். ஆனால் கடைசி கால்பகுதியில் 3 கோல்கள் நியூஸி லாந்து அணி அடிக்க, மேலும் ஒரு கோலடித்து ஸ்பெயின் அணி 4-3 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. வெற்றிக்காக கடுமையாக போராடிய நியூஸிலாந்து அணி பதக்க பிரிவில் இருந்து வெளியேறியது. 2ஆவது காலிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி - பிரான்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளும் பலம் வாய்ந்தவை என்ற நிலையில், ஆட்டத்தின் ஒவ்வொரு நிமிடமும் அனல் பறந்தது. பெனால்டி சூட் அவுட் நீண்ட இந்த ஆட்டத்தில் 2- 2 (3-1) என்ற கோல் கணக்கில் ஜெர்மனி அபார வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறியது.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?