மகளிர் இளையோர் உலகக் கோப்பை ஹாக்கி தொட ரின், 11ஆவது சீசன் தென் அமெரிக்க நாடான சிலியின் தலைநகர் சாண்டியாகோவில் நடைபெற்று வருகிறது. டிசம்பர் 1 முதல் 13ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் இந்தியா மற்றும் போட்டியை நடத்தும் சிலி உட்பட 24 நாடுகள் பங்கேற்றுள்ளன. இந்நிலையில், இந்த தொடரின் 5ஆவது நாளான வெள்ளியன்று நடைபெற்ற 22ஆவது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே - வேல்ஸ் (குரூப் பி) அணிகள் மோதின. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய வேல்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 23ஆவது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4-2 என்ற கோல் கணக்கில் (குரூப் இ) ஸ்பெயின் அணியை புரட்டி யெடுத்தது. அர்ஜெண்டினா - பெல்ஜி யம் (குரூப் பி) அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் நிறைவடைந்தது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?