அரசு மேல்நிலைப் பள்ளியில் போக்சோ விழிப்புணர்வு கருத்தரங்கம்*

அரசு மேல்நிலைப் பள்ளியில் போக்சோ விழிப்புணர்வு கருத்தரங்கம்*


வந்தவாசி, அக் 31:


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த பொன்னூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான 'பெண் கல்வியும் பாதுகாப்பும்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். ரெட் கிராஸ் சங்க செயலாளர் பா.சீனிவாசன், கலாம் பவுண்டேஷன் நிர்வாகி சீ.கேசவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி தமிழாசிரியை எஸ்.உமாதேவி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக, வந்தவாசி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கே.மங்கையர்க்கரசி பங்கேற்று, இன்றைய சூழலில் பெண் கல்வியின் முக்கியத்துவம் பற்றியும், பெண்களின் நிலைப்பாடுகளை பற்றியும், போக்சோ விழிப்புணர்வு பற்றிய பல்வேறு கருத்துக்களையும் சிறப்புரை ஆற்றினார். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் சாந்தி செல்போனில் சிக்கி தவிக்கும் இன்றைய மாணவிகளின் நிலைப்பாட்டை விளக்கினார். மேலும் பல்திறன் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு புத்தக பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் பள்ளி ஆசிரியர்கள் மாணவிகள் பங்கேற்றனர். இறுதியில் உடற்கல்வி ஆசிரியர் எஸ்.ஜோதி நன்றி கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%