தாய்மொழியாம் தமிழ் மொழி: உரையரங்கம்

தாய்மொழியாம் தமிழ் மொழி: உரையரங்கம்


திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த இரும்பேடு அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வந்தை வட்ட கோட்டை தமிழ்ச்சங்கம் சார்பில் "தாய் மொழியாம் தமிழ் மொழி" என்ற தலைப்பில் சிறப்பு உரையரங்கம் நடைபெற்றது. தமிழ் இலக்கிய மன்ற விழாவில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியர் முனுசாமி தலைமை தாங்கினார். கோட்டை தமிழ்ச்சங்க தலைவர் பீ.ரகமத்துல்லா, துணை தலைவர் பா. சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழாசிரியர் செல்வமணி வரவேற்றார். 

சிறப்பு அழைப்பாளராக, ஓய்வு பெற்ற மாவட்ட கல்வி அலுவலர் மா.மங்கையர்க்கரசி பங்கேற்று, தாய் மொழியாம் தமிழ் மொழி என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். மேலும் இலக்கியங்களில் தமிழின் பெருமைகளை பற்றி வலியுறுத்தினார். அனைவரும் தமிழ் மொழியிலேயே குழந்தைகளுக்கு பெயர் வைக்க வேண்டும் என்று வலியுறுத்தி பேசினார். இந்த நிகழ்வில் தமிழ்ச் சங்க செயலாளர் இரா.பாஸ்கரன், பொருளாளர் சீ.கேசவராஜ், ஆசிரியர் சம்பத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இறுதியில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் ஆ.சீனிவாசன் நன்றி கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%