அரியவகை ‘சிக்கிள் செல் அனீமியா’ நோய்க்கு குறைந்த செலவில் மருந்து கண்டுபிடிப்பு: சிஎஸ்ஐஆர் தகவல்

அரியவகை ‘சிக்கிள் செல் அனீமியா’ நோய்க்கு குறைந்த செலவில் மருந்து கண்டுபிடிப்பு: சிஎஸ்ஐஆர் தகவல்

காரைக்குடி:

பழங்​குடி மக்​களை தாக்​கும் ‘சிக்​கிள் செல் அனீமி​யா’ என்ற அரிய நோய்க்கு குறைந்த செல​வில் மருந்து கண்​டு​பிடிக்கப்​பட்​டுள்​ள​தாக சிஎஸ்​ஐஆர் தலைமை இயக்​குநர் என்​.கலைச்​செல்வி கூறி​னார். மத்​திய அறி​வியல் மற்​றும் தொழிலக ஆய்வுக் குழு​மத்​தின் கீழ் (சிஎஸ்​ஐஆர்) காரைக்​குடி​யில் செயல்​பட்டு வரும் மத்​திய மின் வேதி​யியல் ஆராய்ச்சி நிறு​வனத்​தின் (செக்ரி) 78-வது ஆண்டு விழா நேற்று நடை​பெற்​றது.


இதில் பங்​கேற்ற சிஎஸ்​ஐஆர் தலைமை இயக்​குநர் என்​.கலைச்​செல்​வி, பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: சத்​தீஸ்​கர், ஒடிசா, பிஹார், மகா​ராஷ்டிரா உள்​ளிட்ட மாநிலங்​களில் பழங்​குடி மக்​களை ‘சிக்​கிள் செல் அனீமி​யா’ என்ற அரிய​வகை நோய் தாக்கு​கிறது. இதற்​கான மருந்து கண்​டு​பிடிக்​கும் ஆராய்ச்​சி​யில் சிஎஸ்​ஐஆர் கடந்த 8 ஆண்​டு​களாக ஈடு​பட்​டது.


தற்​போது இந்​நோயைக் கண்​டறிந்​து, 20 நிமிடங்​களில் முடிவை அறிவிக்​கக்​கூடிய ‘பிசிஆர்’ தொழில்​நுட்​பத்​தைக் கண்டறிந்துள்ளோம். ஒரு சொட்டு ரத்​தம் மூலம் நோயைக் கண்​டறிய முடி​யும். இந்த கரு​வியை உரு​வாக்​கக்​கூடிய ‘ஸ்​டார்ட் அப்’ நிறு​வனங்களும் ஏற்​பட்​டுத்​தப்​பட்​டுள்​ளன.


ஓரிரு மாதங்​களில் அரசு மின்​னணு சந்​தை​யான ‘ஜெம்’ சந்​தை​யில் இந்​தக் கருவி விற்​பனைக்கு வரும். மேலும், இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்​கும்​போது, உடலில் உள்ள குறை​பா​டான ஜீனை திருத்​தி, மீண்​டும் உடலுக்​குள் செலுத்​தப்​படும். இதன்​மூலம் வாழ்​நாள் முழு​வதும் மருந்து தேவை​யின்றி வாழலாம்.


ரூ.50 லட்சம் செலவில்... அமெரிக்​கா​வில் இந்த சிகிச்​சைக்கு ரூ.28 கோடி செல​வாகும் என்ற நிலை​யில், அதை ரூ.50 லட்​சம் செல​வில் அளிக்க நடவடிக்கை எடுத்து வரு​கிறோம். இந்த சிகிச்​சையை பிரதமரின் காப்​பீட்டு திட்​டத்​தில் இலவச​மாக அளிக்க முடி​யும். இது இந்​திய மருத்​து​வத் துறை​யில் முக்​கிய​மான முன்​னேற்​ற​மாகக் கருதப்​படு​கிறது. இவ்​வாறு அவர் கூறி​னார்.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%