தமிழக மக்கள் உரிமை மீட்பு என்ற தலைப்பில் நடைபயணத்தை தொடங்கினார் அன்புமணி
Jul 27 2025
71

தமிழக மக்கள் உரிமை மீட்பு எனும் தலைப்பில் பாமக தலைவர் அன்புமணி நேற்று திருப்போரூரில் நடைபயணத்தை தொடங்கினார்.
சென்னை: தமிழக மக்கள் உரிமை மீட்பு எனும் தலைப்பில் பாமக தலைவர் அன்புமணி மேற்கொள்ளும் நடைபயணம் திருப்போரூரில் நேற்று தொடங்கியது. பாமக நிறுவனர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் தொடர்ந்து வலுத்து வரும் நிலையில் இரு தரப்பிலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒருபகுதியாக ராமதாஸின் பிறந்த நாளான ஜூலை 25-ம் தேதி தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தைத் தொடங்கப்போவதாக அன்புமணி அறிவித்தார். இந்த நடைபயணத்தால் வடதமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்பதால் தடை விதிக்கக்கோரி டிஜிபி அலுவலகத்தில் ராமதாஸ் மனு அளித்தார்.
எனினும் திட்டமிட்டபடி நடைபயணத்துக்கான 'உரிமை மீட்க... தலைமுறை காக்க' என்ற இலச்சினையையும், ‘ உரிமைப் பயணம் ’ என்ற தலைப்பில் பிரச்சார பாடலையும் அன்புமணி வெளியிட்டார். இதன் தொடர்ச்சியாக நேற்று திருப்போரூரில் நடைபயணத்தை தொடங்கினார். அப்போது முருகன் கோயிலில் வழிபாடு நடத்திவிட்டு, அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்.
இதையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: ராமதாஸின் வழியில் அவரது கனவுகளை நிறைவேற்றவே நடைபயணம் மேற்கொள்கிறேன். மக்களுக்கு உரிமை தராத திமுக அரசை இந்த நடைபயணம் வீட்டுக்கு அனுப்பும். 10 உரிமைகளை முன்வைத்து நடைபயணம் மேற்கொள்கிறேன்.
ஒரு நாளைக்கு 2 மணி நேரம் கால்ஷீட் கொடுத்து, ஆக்சன் என்றதும் முதல்வர் நடிக்கிறார். பெண்களுக்கு ரூ.1,000 கொடுத்தால் உரிமை கிடைக்குமா. அது டாஸ்மாக்குக்குச் செல்கிறது. வேளாண் துறையில் வளர்ச்சி மைனஸ் 0.12 சதவீதமாக இருப்பது வெட்கக்கேடானது. சுயமரியாதையுடன் வாழ்வதற்கான சமூக நீதியை உருவாக்குவோம். இவ்வாறு பேசினார்.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?