ஆசிரியர் என்கிற அகராதி

ஆசிரியர் என்கிற அகராதி



    " தேசத்தை காக்கும் பணியில் மிகப்பெரிய விருது பெற்று அதை தன் ஆசிரியர் இமானுவேல் பாதத்தில் வைத்து வணங்கி நின்றான் அமீர் ..."


      " ராஜா , அமீர் இருவரும் ஒரே பள்ளியில் படித்தனர் . வகுப்பு ஆசிரியர் இமானுவேல் .


     ராஜா படிப்பு விளையாட்டு வீடு என்று தன் வகுப்பாசிரியர் வழி காட்டுதலில் இருந்தான் .


     அமீர் வகுப்பு ஆசிரியரின் வழி காட்டுதல் இருந்தாலும் தீவிரவாத கும்பலுடன் தொடர்பில் இருந்தான் . நாச வேலை மூளைச் சலவை இதில் தன் வாழ்க்கையை செல்லுத்தி விட்டான் அமீர் .


     மெதுவாக ராஜா மூலம் இந்த அமீர் செயல்பாடுகள் அனைத்தையும் தெரிந்து கொண்டனர் வகுப்பாசிரியர் இமானுவேல் .


        பல நாட்கள் மாதங்கள் ஆண்டுகள் என எட்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை அமீரை அழைத்து அவனை நாட்டுப் பற்று பாடலை பாட வைத்து . நாட்டுப் பற்று தலைவர்கள் பற்றி சொல்லி மேடையில் பேச வைத்தார் .


        நாட்டுப் பற்று நாடகங்களில் நடிக்க வைத்தார் . படிப்பில் அமீர் கவனம் செலுத்த வைத்தார் .


     பிறகு சிஐடி போலீஸ் அதிகாரி மூலம் அமீர் தொடர்புடைய கும்பளை பிடிக்க வழி காட்டினார் . அதே சமயம் சமீர் நல்ல மாணவன் திருந்த வாய்ப்பு கொடுங்கள் விட்டு பிடியுங்கள் என்றார் சிஐடி போலீஸ் அதிகாரிடம் ஆசிரியர் இமானுவேல் .... "


       இருந்தும் தான் அதில் தொடர்பு இல்லாதவர் போல அமீரிடம் காட்டிக் கொண்டார் .


      அமீரின் தாய் தந்தையை அழைத்து ரகசியமாக நடந்தவற்றை சொன்னார் ஆசிரியர் இருந்தாலும் அவனை கண்டிக்க வேண்டாம் என்றும் நல்லவர்களோடு நட்பும் பெரியவர்களோடு பேசி பழகும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கச் சொன்னார் .


      தலைச்சிறந்த தாய்நாட்டு பற்றுக் கொண்ட மாணவனாக அமீரை உருவாக்கி பள்ளியை விட்டு அனுப்பினார் ஆசிரியர் இமானுவேல் .


     பல ஆண்டுகள் கழித்து இன்று தேசத்தை காக்கும் உயர் அதிகாரியாக தேசத்தை நாச வேலைகளில் இருந்து காப்பாற்றியதற்காக உயரிய விருது பெற்ற தன் மாணவன் அமீர் இப்போது தன் வீட்டில் தன் கண் முன் நிற்பதை கண் கொட்டாமல் பார்த்து நின்றார் ஆசிரியர் இமானுவேல் .


      என் வகுப்பு ஆசிரியர் தான் என்னை பண்படுத்தினார் என்று பெருமை பொங்க சொல்லி தலை நிமிர்ந்து வணங்கினான் . அமீர் பத்திரிக்கையாளர் பேட்டியில் தைரியமாக .... "


- சீர்காழி .ஆர். சீதாராமன் .

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%