விலகிய அச்சம்

விலகிய அச்சம்



    " கடல் பயணம் என்றால் குமாருக்கு கொள்ளை ஆசை . ஒரு முறை கடலுக்கு மீன் பிடிக்க சென்றால் ஒரு வாரம் ஆகும் திரும்பி வீடு வந்து சேர்ந்து விட ..."


      ஆனாலும் கடும் உழைப்பாளி குமார் கடல் நீரில் கட்டுமரம் போல் மிதந்து கிடப்பான்.


     குமாருக்கு வயது இருப்பத்தி ஆறு நெருங்கி விட்டது . குமார் வீட்டில் அவன் தாய் தந்தை அவனுக்கு திருமணம் செய்திட பெண் பார்த்து வந்தார்கள் .


       ராணி என்ற பெண்ணை பார்த்து விட்டு வந்தான் குமார் அவனுக்கு மிகவும் பிடித்து விட்டது .குமார் குடும்பத்திற்கும் ராணியை பிடித்து விட்டது . 

 

          பெண் வீட்டில் சொல்லி அனுப்புகிறோம் என்று சொல்லி விட்டார்கள் . தாமதத்திற்கு காரணம் தெரிந்து கொள்ள மிகவும் வேதனையோடு ஆசைப்பட்டான் குமார் .


      கடல் வாழ்க்கை ரொம்ப ரிஸ்க் உயிர் பயம் அதிகம் அதனால் வேண்டாம் என்றாள் ராணி . இந்த காரணத்தை குமார் குடும்பத்தில் எப்படி சொல்வது என்று தயங்கினார் ராணியின் அப்பா அருள் .


             எப்படியோ விபரம் அறிந்த குமார் ஆசைப்பட்ட பெண் சேர்ந்து வாழ கிடைக்க வில்லையே என்று மிகவும் வருந்தினான். கடலுக்கு போகாமல் இருந்த குமார் ஒரு மாதத்தில் மனம் மாறி கடலுக்கு தொழில் செய்ய புறப்பட்டு சென்றான்.


         ஒரு நாள் மாலை நேரத்தில் ராணி தொலைக்காட்சிப் பெட்டியை பார்த்துக் கொண்டு இருந்தாள். அப்போது வானில் சாகசம் காட்டிய விமானி பலி என்ற செய்தியும் , ரயில் தண்டவாளத்தில் சிக்கி இருவர் பலி என்ற செய்தியும், சாலையைக் கடக்க முயன்ற வாலிபர் லாரியில் அடிபட்டு பலி என்று செய்தியும் ஃபிளாஸ் நியூசாக ஓடிக் கொண்டிருந்தது .


        கண் கொட்டாமல் இந்த செய்திகளை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ராணி குழப்பத்தில் ஆழ்ந்து போனாள் . 



        மரணம் என்பது பொது விதி அது யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் வரும் அதனால் கடலில் மீன் பிடித்தொழில் செய்வது ஆபத்து தான் என்றாலும் விதி முடியாமல் உயிர் போகாது என்று வாடி வதங்கி குழம்பி யோசித்து நின்றாள் ராணி .


         இரவு படுத்து உறக்கம் வராமல் அதைப் பற்றியே யோசித்து பிறகு எப்படியோ ஒரு வழியாக உறங்கி விட்டாள் ராணி .


         காலையில் எழுந்ததும் மனம் தெளிந்து உடன் குமார் வீட்டுக்கு தானே சென்றாள் ராணி . குமார் பெற்றோர் குமார் கடலுக்கு போயி இருக்கிறான் - மாலை அவன் வீடு திரும்பும் வேளை வந்து விட்டது என்றனர் .


       உடன் கடற்கரைக்கு சென்று அலை ஓசை மத்தியில் சுடர்விடும் விளக்கொளியின் அழகில் தன்னை மறந்து கடல் அன்னையை ரசித்துப் பார்த்தபடி நின்றாள் ராணி .


        மாலைப் பொழுது நகர இரவுப் பொழுது நெருங்க ஒரு வழியாக குமார் கடற்கரைக்கு திரும்பினான் .

ராணி காத்திருந்து குமாருக்கு ஆரத்தி எடுத்து திலகம் இட்டாள் .


        மனம் விரும்பிய பெண் மீண்டும் கிடைத்த மகிழ்ச்சி குமாரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது. இனிமையாக குமார் - ராணி திருமணம் நடை பெற்று முடிந்தது .


                    ஆனால் ராணி அன்று தொடங்கிய ஆரத்தி எடுத்து திலகம் இடும் பணியை ஒரு கடமையாக பரிகாரமாக காணிக்கையாக குமார் கடலுக்கு புறப்படும் போதும் , திரும்பும் போதும் செய்து வந்தாள் .


               மனம் அது நினைத்தால் மலராய் நறுமணம் வீசும் அதுவே வெறுத்தால் குரங்காய் மாறும் என்பது சரிதான் அன்றோ ..."


- சீர்காழி . ஆர். சீதாராமன்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%