ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர் திருவிழா துவக்கம்

ஆண்டாள் கோவில் ஆடிப்பூர தேர் திருவிழா துவக்கம்


ஸ்ரீவில்லிப்புத்தூர், ஜூலை 21 

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் ஆடிப்பூர தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.


 108 வைணவ தலங்களில் மிக முக்கியத் தலமாக கருதப்படுவது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில். இந்த கோவிலில் ஆடிப்பூர தேர்த்திருவிழா கொடிஏற்றம் நேற்று நடந்தது. இந்த நிகழ்வை முன்னிட்டு, கொடிமரத்தில் புல் கட்டுகள் வைத்து கொடி பட்டம் சுற்றப்பட்டு, கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. விழாவிற்கு வந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீரங்க மன்னாரை தரிசனம் செய்தனர்.

ஆடிப்பூர தேர் திருவிழா தொடர்ந்து எட்டு நாட்கள் நடைபெறும். இந்த எட்டு நாள் திருவிழாவிலும் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீரங்க மன்னார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்கள்.

 ஐந்தாம் திருநாளான ஜூலை 24ம் தேதி கருட சேவை, ஜூலை 26ம் தேதி சயன சேவை நடக்கிறது. மிக முக்கிய நிகழ்வான ஆடிப்பூர திருதேரோட்ட நிகழ்வு ஜூலை 28 ம் தேதி நடக்கிறது.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%