நயினார் நாகேந்திரன் துணை முதல்வரா? பாஜக விழாவில் பரபரப்பு
Jul 20 2025
137
அரியலூர், ஜூலை 21-
அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ராஜேந்திர சோழனின் பிறந்த நாளையொட்டி வருகிற 23ம் தேதி முதல் முப்பெரும் அரசு விழா நடக்கிறது. சோழீஸ்வரர் ஆலய வளாகத்தில் நடக்கும் முப்பெரும் விழாவில், கடைசி நாளான 27 ம் தேதி பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதற்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாஜக சார்பில் செய்ய வேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் பரமேஸ்வரி தலைமையில் நடந்தது. இதில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் வரவேற்று பேசிய மாவட்ட தலைவர் பரமேஷ்வரி, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களே என கூறியபோது, அப்போது மேடையில் இருந்து வருங்கால துணை முதல்வர் என சொல்லுங்கள் என்று குரல் ஒலித்தது.
இதனையடுத்து வருங்கால துணை முதல்வர் நயினார் நாகேந்திரன் அவர்களே! என பாஜ.க மாவட்ட தலைவர் பரமேஸ்வரி கூறினார்.
இதைக் கேட்டதும், மேடையில் இருந்த நயினார் நாகேந்திரன் பதறிப்போனார். அப்படி எல்லாம் சொல்லாதீர்கள் என்று கையை அசைத்து கூறினார். அதன்பிறகு அண்ணன் நயினார் நாகேந்திரன் அவர்களே என பரமேஸ்வரி கூறினார்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?