வேற்று மதத்தைச் சேர்ந்த 4 ஊழியர்கள் அதிரடி நீக்கம் திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை, ஜூலை 21-
உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் ஆயிரக்கணக்கில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளனர். இங்கு இந்துக்கள் மட்டுமே பணியாற்ற வேண்டும் என்பது முக்கிய நிபந்தனை. இந்த நிபந்தனைக்கு மாறாக துணைச் செயல் பொறியாளர் (தரக் கட்டுப்பாடு) எலிசர், மருத்துவமனை செவிலியர், எஸ். ரோஸி, மருந்தாளர் பிரேமாவதி, ஆயுர்வேத பார்மசி டாக்டர் அசுந்தா ஆகிய நான்கு பேர் வேற்று மதத்தை சேர்ந்தவர்களக இருந்ததால் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நான்கு பேரும் வேறு மதத்தினர் என்பதை மறைத்து பல ஆண்டுகளுக்கு முன்பே பணியில் சேர்ந்துள்ளனர். பணியில் சேரும் போது போலி சான்றிதழ் வழங்கியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில், "இந்த 4 ஊழியர்களும் திருப்பதி கோவிலின் நடத்தை விதிகளை மீறி, பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதாக தெரியவந்துள்ளது. மேலும் திருப்பதியில் பணிபுரியும் நபர்கள் நடத்தை மற்றும் நடைமுறை இரண்டிலும் இந்து நம்பிக்கையின் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டும். ஆனால் இவர்கள் நான்கு பேரும் அதை மீறியுள்ளனர். திருப்பதி தேவஸ்தானத்தின் விஜிலென்ஸ் துறை சமர்ப்பித்த அறிக்கையை ஆராய்ந்த பிறகு, விதிகளின்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, நான்கு ஊழியர்களும் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர்" என்று கூறப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?