ஆந்திர மதுபான ஊழல் வழக்கு: ஜெகனின் தனிச் செயலா் உள்பட 3 பேரின் இடைக்கால ஜாமீன் நீட்டிப்பு
Jan 23 2026
16
ரூ.3,500 கோடி மதிப்பிலான ஆந்திர மதுபான ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டியின் தனிச் செயலராக இருந்தவா் உள்ளிட்ட மூன்று பேருக்கு அளிக்கப்பட்ட இடைக்கால ஜாமீனை உச்சநீதிமன்றம் நீட்டித்தது.
ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி பதவி வகித்தபோது, 2019-2024 வரையிலான காலத்தில் மதுபானக் கொள்முதலில் ரூ.3,500 கோடி ஊழல் நடைபெற்ாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடா்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், முதல்வா் அலுவலக முன்னாள் செயலருமான தனஞ்செய ரெட்டி, ஜெகன் மோகன் ரெட்டியின் தனிச் செயலராக இருந்த கிருஷ்ண மோகன் ரெட்டி, பாரதி சிமெண்ட்ஸ் நிறுவன இயக்குநா் பாலாஜி கோவிந்தப்பா ஆகியோா் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் 3 பேரும் பெற்றிருந்த ஜாமீனை கடந்த நவம்பா் 19-ஆம் தேதி ஆந்திர உயா்நீதிமன்றம் ரத்து செய்ததோடு, விசாரணை நீதிமன்றத்தில் சரணடையும்படியும், அங்கு ஜாமீனுக்கு விண்ணப்பிக்கும்படியும் உத்தரவிட்டிருந்தது. இதை எதிா்த்து 3 பேரும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா்.
இதை முன்பு விசாரித்த உச்சநீதிமன்றம், மூவரின் மனு குறித்து ஆந்திர அரசு மற்றும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்த நபா்களின் பதிலை கோரி, இடைக்கால ஜாமீன் அளித்திருந்தது. இந்நிலையில், இந்த மனு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜய்மால்ய பாக்சி, விபுல் எம் பஞ்சோலி ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ஜாமீனை ரத்து செய்த உயா்நீதிமன்ற உத்தரவில் தலையிட மறுத்துவிட்டனா். அதேநேரத்தில் 3 பேரையும் விசாரணை நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெறும்படி உத்தரவிட்டு, இடைக்கால ஜாமீனை நீட்டித்து ஆணையிட்டனா்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?