ஆன்லைன் கேம் மூலமாக பெண்களை குறிவைக்கும் மதமாற்ற கும்பல்: போலீஸ் விசாரணையில் தகவல்

ஆன்லைன் கேம் மூலமாக பெண்களை குறிவைக்கும் மதமாற்ற கும்பல்: போலீஸ் விசாரணையில் தகவல்

புதுடெல்லி:

ஆக்​ரா​வில் நடை​பெற்ற கட்​டாய மதமாற்ற சம்​பவங்​களில் பெண்​களை குறிவைக்க ஒரு கும்​பல் ஆன்​லைன் கேமிங், டார்க் வெப் போன்ற சமூக வலை​தளங்​களை பயன்​படுத்​தி​யுள்​ளது விசா​ரணை​யில் தெரிய​வந்​துள்​ளது.


இதுகுறித்து ஆக்ரா காவல் ஆணை​யர் தீபக் குமார் கூறிய​தாவது: ஹரி​யானா, காஷ்மீர், ஆக்ராவில் கடந்த மூன்று மாதங்​களாகவே இளம்​பெண்​களை குறி​வைத்து பாகிஸ்​தானிலிருந்து ஒரு கும்​பல் கட்​டாய மதமாற்ற நடவடிக்​கை​களில் ஈடு​பட்​டுள்​ளது.


இதற்​காக, அவர்​கள் ஆன்​லைன் கேம்​ஸ், டார்க் வெப் போன்ற சமூக வலை​தளங்​களை பயன்​படுத்​தி​யுள்​ளது பாதிக்​கப்​பட்​ட​வர்​களிட​ம் நடத்திய விசா​ரணை​யில் இருந்து தெரிய​வந்​துள்​ளது.


இந்து மதத்தை விமர்​சித்​தும் இஸ்​லாம் மதத்தை ஊக்​கு​வித்​தும் காஷ்மீரைச் சேர்ந்த சில பெண்​கள் பேசி இந்த கட்​டாய மதமாற்ற கும்​பலுக்கு ஆதர​வாக செயல்​பட்​டுள்​ளனர். ஆன்​லைன் விளை​யாட்​டு​களுக்கு அடிமை​யாகி உள்ள இந்து பெண்​களிடம் சமூக வலை​தளங்​கள் மூல​மாக தன்​வீர் அகமது மற்​றும் சஹில் அதீம் ஆகியோர் பாகிஸ்​தானில் இருந்து பேசி​யுள்​ளனர்.


அவர்​கள் படிப்​படி​யாக மத சித்தாந்​தத்தை பெண்​கள் மனதில் விதைத்து அவர்​களை கட்​டாய மதம் மாற்​றம் செய்​வதற்கு மூளைச் சலவை செய்​துள்​ளனர். இதில் மற்​றொரு குற்​ற​வாளி​யான ரகு​மான் குரேஷி, இது​போன்ற கட்​டாய மதமாற்ற நடவடிக்​கைகளுக்கு கூட்டு நிதி​யளித்​தல் மூலம் பணத்தை திரட்​டி​யுள்​ளார்.


கிரிப்​டோகரன்சி மற்​றும் வெளி​நாட்டு கரன்சி மூல​மான பணப்​பரிவர்த்​தனை​களி​லும் அவர் ஈடு​பட்​டுள்​ளார். காசா முனைப் பகுதியைச் சேர்ந்த சில தனி​நபர்​களும் இந்த விவ​கா​ரத்​தில் சம்​பந்​தப்​பட்​டுள்​ளனர். உத்​த​ராகண்ட் மாநிலத்​தைச் சேர்ந்த 21 வயது பெண் அளித்த வாக்​குமூலம் இந்த கட்​டாய மதமாற்ற மோசடி சம்​பவத்​துக்கு முக்​கிய சாட்​சி​யாக அமைந்​துள்​ளது. இவ்​வாறு தீபக்​ குமார்​ தெரிவித்​தார்​.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%