மகாராஷ்டிர மாநிலத்தில் முறைகேடு: மகளிர் உரிமைத் தொகை பெறும் 14,000 ஆண்கள்

மகாராஷ்டிர மாநிலத்தில் முறைகேடு: மகளிர் உரிமைத் தொகை பெறும் 14,000 ஆண்கள்

மும்பை:

மகாராஷ்டிராவில் மகளிர் உரிமைத் தொகையை 14 ஆயிரம் ஆண்​கள் பெற்று வரு​வது தணிக்​கை​யில் தெரிய வந்துள்ளது மகா​ராஷ்டி​ரா​வில் கடந்த ஆண்டு சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெற்​றது. தேர்​தல் நடை​பெறு​வதற்கு சில மாதங்களுக்கு முன்​பு, மகளிர் உரிமைத் தொகை திட்​டம் அறி​முகம் செய்​யப்​பட்​டது.


இதன்​படி 21 முதல் 65வயதுக்​குட்​பட்ட, ஆண்டு வரு​மானம் ரூ.2.5 லட்​சத்​துக்​குட்​பட்ட பெண்​களுக்கு மாதந்​தோறும் ரூ.1,500 நிதியுதவி வழங்​கப்​படு​கிறது. இதனிடையே, தேர்​தலில் பாஜக கூட்​டணி ஆட்​சியை தக்​க​வைத்​துக் கொண்​டது. இதற்கு இந்த திட்டம் முக்​கிய பங்கு வகித்​த​தாக கூறப்​படு​கிறது.


இந்​நிலை​யில், இந்த திட்​டம் குறித்து பெண்​கள் மற்​றும் குழந்​தைகள் மேம்​பாட்டு துறை சார்​பில் தணிக்கை செய்​யப்​பட்​டது. இதில், 14,298 ஆண்​களுக்கு இந்த திட்​டத்​தின் கீழ் ரூ.21.44 கோடி வழங்​கப்​பட்​டிருப்​பது தெரிய​வந்​துள்​ளது. இந்த திட்​டத்​துக்கு இணைய வழி​யில் விண்​ணப்​பம் பெறப்​பட்​டது.


அப்​போது, ஆண்​கள், பெண்​களின் பெயரில் விண்​ணப்​பம் செய்து இத்​தகைய முறை​கேட்​டில் ஈடு​பட்​டிருப்​பது அம்​பல​மாகி உள்​ளது. இந்த திட்​டம் அமலுக்கு வந்து 10 மாதங்​கள் கடந்த நிலை​யில் இந்த மோசடி வெளிச்​சத்​துக்கு வந்​துள்​ளது.


இதுகுறித்து துணை முதல்​வர் அஜித் பவார் கூறும்​போது, “மகளிர் உரிமைத் தொகை திட்​டம் ஏழை பெண்​களின் நலனுக்​காக அறி​முகம் செய்​யப்​பட்​டது. இதில் ஆண்​கள் பயன்​பெறு​வதை ஏற்க முடி​யாது. அவ்​வாறு உதவித் தொகையை பெற்​றவர்​களிட​மிருந்து திரும்ப வசூலிக்​கப்​படும். இதற்கு அவர்​கள் ஒத்​துழைக்​கா​விட்​டால் கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும்’’ என்​றார்.


மேலும் தகு​தி​யில்​லாத 26.34 லட்​சம் பெண்​கள் இந்த திட்​டத்​தில் பயனடைந்து வந்​தது தெரிய​வந்​தது. இதையடுத்​து, அவர்களுக்கான நிதி​யுதவி நிறுத்​தப்​பட்​டுள்​ள​தாக தகவல் வெளி​யாகி உள்​ளது.


குறிப்​பாக, ஒரு குடும்​பத்​தைச் சேர்ந்த 2 பெண்களுக்கு மட்டுமே இந்த தொகை வழங்​கப்​படும் என அறிவிக்​கப்​பட்​டிருந்​தது. ஆனால் 7.97 லட்​சம் பெண்​கள் 3-வ​தாக பதிவு செய்து பயனடைந்து வரு​வது தெரிய​வந்​துள்​ளது. இதனால் அரசுக்கு ரூ.1,196 கோடி இழப்பு ஏற்​பட்​டுள்​ளது.


இது​போல, விதி​களை மீறி உச்​சவரம்​பான 65 வயதுக்கு மேற்​பட்ட 2.87 லட்​சம் பெண்​கள் நிதி​யுதவி பெற்று வரு​கின்​றனர். இதனால் ரூ.431.7 கோடி கூடு​தல் செலவு ஏற்​பட்​டுள்​ளது. மேலும் 4 சக்கர வாக​னம் வைத்​திருக்​கும் குடும்​பத்​தைச் சேர்ந்த 1.62 லட்​சம் பெண்​கள் நிதி​யுதவி பெற்று வரு​வது தெரிய​வந்​துள்​ளது. இத்​திட்​டத்​தில் பல்​வேறு முறை​கேடு​கள் இருப்​ப​தால் முறை​யாக வி​சா​ரணை நடத்த வேண்​டும்​ என்​ற கோரிக்​கை எழுந்​துள்​ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%