ஆபரேஷன் சிந்தூர்: பாதுகாப்புத்துறையில் இந்தியாவின் தன்னிறைவுக்கு சிறந்த உதாரணம் - ராஜ்நாத் சிங்

ஆபரேஷன் சிந்தூர்: பாதுகாப்புத்துறையில் இந்தியாவின் தன்னிறைவுக்கு சிறந்த உதாரணம் - ராஜ்நாத் சிங்


ஆயுதப் படைகளால் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான உபகரணங்கள் உள்நாட்டுத் தயாரிப்புகளாக இருந்தன என்று ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

மும்பை,


மராட்டிய மாநிலம் புனேவில் உள்ள சிம்பையோசிஸ் திறன்கள் மற்றும் தொழில்முறை பல்கலைக்கழகத்தின் 6-வது பட்டமளிப்பு விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது;-


“பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு அடையும் நோக்கில் நாம் பணியாற்றத் தொடங்கினோம். ஆரம்ப கட்டத்தில், முழு அமைப்பையும் மாற்ற முயற்சித்ததால் அது கடினமாக இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு, ஆயுதங்களுக்காக நாம் மற்ற நாடுகளைச் சார்ந்து இருந்தோம். வெளிநாட்டில் இருந்து பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவது நமக்கு அவசியமாகிவிட்டது, மேலும் உள்நாட்டு உற்பத்தி நடைபெறவில்லை.


ஆனால் சுதந்திரம் பெற்றதில் இருந்து நிலவி வந்த தடையை இந்தியா இப்போது உடைத்துவிட்டது. நாட்டிற்குள் ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கு நமது அரசு வலுவான உந்துதலை வழங்கியுள்ளது. இருப்பினும் பாதுகாப்பு கொள்முதல் விஷயத்தில், பிற நாடுகளில் இருந்து ஆயுதங்களை வாங்குவதற்கு நாம் பழகிவிட்டோம். எனவே இந்த மாற்றம் எளிதானது அல்ல.


உள்நாட்டில் ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கான அரசியல் உந்துதலோ, அல்லது பாதுகாப்பு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான சட்ட கட்டமைப்புமோ இல்லை. இந்த துறையில் இந்தியா தன்னிறைவு பெற உதவும் உத்வேகம் நாட்டின் இளைஞர்களிடம் இல்லாமல் இருந்தது. நிலைமை நமக்கு சாதகமாக இல்லை, உண்மையில், அது பாதகமாக இருந்தது.


ஆனால் அத்தகைய சூழ்நிலைகளிலும் கூட, நாங்கள் முயற்சியை நிறுத்தவில்லை. பாதுகாப்பு உற்பத்தியை ஊக்குவிக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் நமது அரசு எடுத்தது. இன்று, அந்த முயற்சிகள் வெளிப்படையான பலன்களைத் தருகின்றன. ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது நமது ஆயுதப் படைகளின் துணிச்சலை நீங்கள் பார்த்திருப்பீர்கள். பாதுகாப்புத்துறையில் இந்தியாவின் தன்னிறைவுக்கு ‘ஆபரேஷன் சிந்தூர்’ சிறந்த உதாரணம். ஏனெனில் ஆயுதப் படைகளால் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான உபகரணங்கள் உள்நாட்டுத் தயாரிப்புகளாக இருந்தன.”


இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%