ஆம்புலன்ஸ் ஓட்டுநரை மிரட்டிய விவகாரம்! எடப்பாடி பழனிசாமி மீது காவல்துறையில் புகார்

சென்னை:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு பகுதி யில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலா ளர் எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருந்த போது, மக்கள் கூட்டத்தின் நடுவே 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. இதைப் பார்த்து கோபமடைந்த அவர், அடுத்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இதில் நோயாளியாக மருத்துவமனைக்குச் செல்வார்” என்றார். இச்சம்பவம் தொடர்பாக விளக்கமளித்த ஆம்பு லன்ஸ் ஓட்டுநர், “பள்ளிகொண்டாவில் வேலை பார்க்கிறேன். பெண் நோயாளி ஒருவரை அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்காக அணைக் கட்டு சென்றேன். 10 மணிக்கு மேலாகி விட்டதால், அதிமுக நிகழ்ச்சி முடிந்திருக்கும் என்று கருதியே அணைக்கட்டு வழியாக சென்றேன். ஆனால், அங்கிருந்தவர்கள் என்னைத் தாக்கி, வாகனத்தைச் சேதப்படுத்தினர்” என்றார். இதனிடையே, ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை மிரட்டும் வகையில் எடப்பாடி பழனிசாமி பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலு வலகத்தில் எஸ்.பி. அரவிந்தை சந்தித்து புகார் மனு வழங்கப்பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?