இசைப்பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா
Dec 09 2025
21
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொழில் முனைவோர் வேலை மேம்பாட்டு நிறுவனமானது, திருச்சியில் உள்ள ட்ரினிட்டி இசைப்பள்ளியுடன் இணைந்து 2008-2009 ஆம் கல்வி ஆண்டு முதல், கீபோர்டு கிதார் மற்றும் டிரம்ஸ் பயிற்சிகளில் சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகளை நடத்தி வருகிறது. 2024-2025 இல் சான்றிதழ் பயிற்சியில் கீபோர்டில் 41 பேரும், கிதாரில் 14 பேரும், டிரம்ஸில் 18 பேருமாக 73 பேரும், பட்டயப் பயிற்சியில் கிபோர்டில் 21 பேரும், டிரம்ஸில் 5 பேருமாக மொத்தம் 26 பேரும் என மொத்தம் 99 பேர் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர். இவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில், தொழில் முனைவோர் சுய வேலை மேம்பாட்டு நிறுவனத்தின் (ஐ.ஈ.சி.டி) இயக்குநர் ராம்கணேஷ் தலைமையேற்று, மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டி பேசினார். மான்ட்போர்ட் பள்ளியின் முதல்வர் அருட்திரு சகோ. ராபர்ட். வாழ்த்துரை வழங்கினார். திரைப்பட இசையமைப்பாளர் ஜெயா கே. தாஸ் சிறப்புரையாற்றினார். முன்னதாக, ட்ரினிட்டி இசைப்பள்ளி இசை ஆசிரியர் அகிலன் ராயன் வரவேற்றார். ட்ரினிட்டி இசைப்பள்ளி மாணவர் ரோஹித் சரவணன் நன்றி கூறினார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?