பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்புக்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
Dec 09 2025
25
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்விநிறு வனங்கள் மற்றும் தனி யார் தொழிற் கல்லூரிக ளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பி.சி, எம். பி.சிசீர்மரபினர் பிரிவைச் சார்ந்த மாணவ, மாண வியருக்கு பிரதம மந்திரி பள்ளி மேற்படிப்புகல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். இதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவி யல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பி.சி., எம்.பி.சி., சீர்மர பினர் மாணவ, மாண வியருக்கு எவ்வித நிபந் தனையுமின்றி கல்வி உதவித் தொகை வழங்கப் படுகிறது. இளங்கலை (தொழிற்படிப்பு), முது கலை, பாலிடெக்னிக் போன்ற பிற படிப்பு பயிலும் ளுக்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட் சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.இந்த கல்வி உதவித் தொகை திட்டத்திற்கு மாணவ, மாணவியருக்கு கல்லூரி மூலம் வழங்கப் பட்டுள்ள உமிஸ்” எண் மூலம் htts://umis.tn.gov. in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. மாணவர்கள்ள் தாங்கள்பயிலும் கல்லூரியில் கல்வி உதவித் தொகைக் கென உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை அணுகி https://umis. tn.gov.in/ என்ற இணைய தளத்தின் மூலம் கல்வி உதவித் தொகைக்கு இந்த திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்கலாம். பயன்பெற மாணவர்கள் விண்ணப்பம் சமர்ப்பிக்க வரும் 31ஆம் தேதி கடைசி நாளாகும். கல்வி உதவித்தொகை தொடர்பான சங்தே கங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அலுவ லக நேரங்களில் அணுகி விபரங்களை பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சுகுமார் தெரிவித்தார்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?