கோவை, நாமக்கல் மருத்துவர்களிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
Dec 09 2025
25
கரூரில் கடந்த செப்.27 ஆம் தேதி, தவெக பிரச்சாரக் கூட்ட நெரி சலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சி யாக உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட சிபிஐ கண் காணிப்புக் குழுத் தலைவர் அஜய் ரஸ்தோகி உள்ளிட்ட அதிகாரிகள் அண்மையில் கரூர் வந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, சிபிஐ அதிகாரி பிரவீன்குமார் தலைமையிலான குழுவினர் கடந்த டிச.4 ஆம் தேதி கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்க வேல் மற்றும் சம்பவத்தில் உயிரி ழந்தவர்களின் சடலங்களை உடற் கூராய்வு செய்த தூத்துக்குடி, நாகை மாவட்ட அரசு மருத்துவர்களிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, வெள்ளிக்கிழமை கரூர் நெரிசல் சம்பவத்தின் போது உயிரிழந்தவர்களின் உடல்களை உடற்கூராய்வு செய்த நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு மருத்துவர்கள் 3 பேரிடம் விசா ரணை மேற்கொண்ட நிலையில், சனிக்கிழமை கோவை, நாமக்கல், திருச்செங்கோடு பகுதிகளைச் சேர்ந்த 5 மருத்துவர்கள் சிபிஐ அதி காரிகள் முன் ஆஜராகினர். அவர் களிடம் சுமார் 2 மணி நேரம் விசா ரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து க.பரமத்தி காவல் நிலைய ஆய்வாளர் தங்கராஜ் மற்றும் கரூர் அனைத்து வணிகர் சங்கங்களைச் சேர்ந்தவர்களிட மும் சிபிஐ அதிகாரிகள் விசா ரணை நடத்தினர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?