வால்பாறையில் மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு குழு அமைப்பு
Dec 09 2025
25
சென்னை: வால்பாறையில் மனித-வனவிலங்கு மோதலை தடுக்க சிறப்பு குழு அமைத்து தமிழக அரசு உத்தர விட்டுள்ளது. சனிக்கிழமை இரவு ஐயர்பாடி தேயிலைத் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த 5 வயது சிறுவன் சைபுல் ஆலம் சிறுத்தை தாக்குதலில் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் தலைமை முதன்மை வனக்காப்பாளர் ராம சுப்பிரமணியன் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர், பொள்ளாச்சி சார்-ஆட்சியர், இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை பிரதிநிதி, வால்பாறை நகராட்சி ஆணையர், தொழிலாளர் துறை உதவி ஆணை யர் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். தேயிலை எஸ்டேட் பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கை கள் திறம்பட செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. குடியிருப்புகளைச் சுற்றி புதர்களை அகற்றுதல், போதிய விளக்கு வசதி செய்தல், மாலை நேரங்க ளில் அதிக எச்சரிக்கையுடன் இருத்தல் போன்ற வழிமுறை களை பின்பற்ற தோட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது. இக்குழு இரண்டு வாரங்களுக்குள் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?