
சென்னை, ஆக 16–
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐஓபி), நம் நாட்டின் 79-வது சுதந்திர தின விழா அதன் மத்திய அலுவலகத்தில் தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதத்தில் அதிக உற்சாகத்துடனும், பெருமையுடனும் கொண்டாடியது. வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயலாக்க அதிகாரி அஜய் குமார் ஸ்ரீவத்சவா வங்கியின் அலுவலக வளாகத்தில் மூவர்ண தேசியக் கொடியை ஏற்றி விழாவைத் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. அதையடுத்து பாதுகாப்பு துறை பணியாளர்கள் பங்கேற்ற கண்கவர் அணிவகுப்பு நிகழ்வும் நடைபெற்றது. அனைவரும் தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியை ஏற்றனர்.
கைப்பந்து, கூடைப்பந்து போட்டிகளில் பெற்ற பரிசுகளை வீரர்கள் உயர் அதிகாரிகளிடம் காட்டி மகிழ்ந்தனர். செயல் இயக்குனர் தனராஜ் டி, தலைமை ஊழல் கண்காணிப்பு அதிகாரி ராஜீ குமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Related News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?