இந்தியா-–அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்

இந்தியா-–அமெரிக்கா இடையே விரைவில் வர்த்தக ஒப்பந்தம்


புதுடெல்லி, அக்.25-–


இந்தியா-–அமெரிக்கா இடையே யான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் எட்டப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


பரஸ்பர வரி என்ற பெயரில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடுமையான வரி விதித்து உள்ளார்.


இதில் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. அத்துடன் ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்காக கூடுதலாக இந்திய பொருட்களுக்கு 25 சதவீதம் என மொத்தம் 50 சதவீத வரியை விதித்துள்ளார்.


டிரம்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு மத்தியில் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்காக இரு நாடுகளும் தொடர்ந்து முயன்று வருகின்றன. இதில் முதற்கட்ட ஒப்பந்தத்துக்காக 5 கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. மத்திய வர்த்தக செயலாளர் ராஜேஷ் அகர்வால் தலைமையிலான குழுவினர் கடந்த வாரம் அமெரிக்கா சென்று 3 நாட்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.


இந்த பேச்சுவார்த்தைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. அதாவது இந்தியா-–அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்துக்கு மிக அருகில் இருப்பதாக வர்த்தக அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர். ஒப்பந்தத்தின் வடிவத்தை இரு தரப்பினரும் உருவாக்கி வருவதாகவும் அவர்கள் கூறினர்.


மேலும் அவர்கள் கூறுகையில், ‘வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கிறது, பேச்சு வார்த்தைகளில் புதிய பிரச்சினைகள் எதுவும் தடை யாக இல்லை. பெரும்பாலான விஷயங் களில் நாங்கள் ஒன்றிணைகிறோம்’ என்றும் தெரிவித்தனர்.


இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கு இடையே நீடித்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்துக்கும் தீர்வு காணப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%