இந்திய ஜூனியர் ஹாக்கி அணி பயிற்சி முகாமிற்கு கோவில்பட்டியைச் சோ்ந்த 3 பேர் தேர்வு
தூத்துக்குடி, ஜன.
இந்திய ஜூனியா் ஹாக்கி அணி பயிற்சி முகாமுக்கு கோவில்பட்டியைச் சோ்ந்த ஒரு வீராங்கனை, 2 வீரா்கள் தோ்வு செய்யப்பட்டனா். தமிழக ஜூனியா் ஹாக்கி அணி , தேசிய போட்டி யில் கடந்தாண்டு சிறப்பாக விளையாடியது. அந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய கோவில் பட்டியைச் சோ்ந்த சுபலட்சுமி, அருண், மணிமாறன் ஆகி யோர் இந்திய ஹாக்கி அணி பயிற்சி முகாமுக்குத் தோ்வு பெற்றனா். தோ்வு பெற்ற வீரா்கள் பெங்களூரில் நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்து கொள்வா். அங்கு சிறப்பாக விளையாடினால், 2027-ஆம் ஆண்டு நடைபெறும் உலக கோப்பை ஜூனியா் ஹாக்கி போட்டியில் இந்திய அணிக்காக விளையாட வாய்ப்பு பெறலாம் பயிற்சி முகாமுக்குத் தோ்வு செய்யப்பட்டுள்ள வீரா்களை ஹாக்கி யூனிட் ஆஃப் தூத்துக்குடி தலைவா் மோகன்ராஜ் அருமை நாயகம், செயலா் குரு சித்திர சண்முக பாரதி, பொருளா ளா் காளிமுத்து பாண்டியராஜா, முன்னாள் இந்திய ஹாக்கி அணி வீரா் அஸ்வின், ஆல்ட்ரின் அதிசயராஜ், திருச்செல்வம் ஆகியோர் பாராட்டினா்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?