இந்திய தொண்டு அமைப்பு மகசேசே விருதுக்கு தேர்வு!

இந்திய தொண்டு அமைப்பு மகசேசே விருதுக்கு தேர்வு!

புதுடெல்லி:

பிலிப்​பைன்ஸ் முன்​னாள் அதிபர் ரமோன் மகசேசே நினை​வாக ஆண்​டு​தோறும் விருது வழங்​கப்​பட்டு வரு​கிறது. இது ஆசி​யா​வின் நோபல் பரிசு என்று வர்​ணிக்​கப்​படு​கிறது. இந்த ஆண்​டுக்​கான ரமோன் மகசேசே விருதுக்கு இந்​தி​யாவை சேர்ந்த எஜுகேட் கேர்ள்ஸ் என்ற தன்​னார்வ தொண்டு அமைப்பு தேர்வு செய்​யப்​பட்டு உள்​ளது.


அதோடு மாலத்​தீவை சேர்ந்த சுற்​றுச்​சூழல் ஆர்​வலர் ஷாஹினா அலி, பிலிப்​பைன்ஸை சேர்ந்த கத்​தோலிக்க போதகரும் சமூக ஆர்​வலரு​மான பிளவி வில்​லனு வேவா ஆகியோ​ருக்​கும் ரமோன் விருது அறிவிக்​கப்​பட்டு உள்​ளது.


கடந்த 2007-ம் ஆண்​டில் சமூக ஆர்​வலர் ஷபீனா ஹுசைன், எஜுகேட் கேர்ள்ஸ் என்ற தொண்டு அமைப்பை உரு​வாக்​கி​னார். இந்த அமைப்பு மும்​பையை தலை​மை​யிட​மாகக் கொண்டு செயல்​படு​கிறது. ராஜஸ்​தான், மத்​திய பிரதேசம், உத்தர பிரதேசத்​தில் சுமார் 67 லட்​சத்​துக்​கும் மேற்​பட்ட மாணவி​கள் கல்​வியை தொடர எஜுகேட் கேர்ள்ஸ் அமைப்பு உதவி செய்​துள்​ளது.


இந்த அமைப்​பில் சுமார் 13,000-க்​கும் மேற்​பட்ட தன்​னார்​வலர்​கள் இணைந்து பணி​யாற்றி வரு​கின்​றனர். மத்​திய அரசின் நிதி​யுத​வியை பெற்று பெண் கல்​வியை ஊக்​குவிக்க பல்​வேறு திட்​டங்​களை எஜுகேட் கேர்ள்ஸ் அமைப்பு வெற்​றிகர​மாக செயல்​படுத்தி வரு​கிறது


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%