இந்திரா காந்தியின் நினைவு தினம்: மத்திய மாவட்ட காங்., சார்பில் அனுசரிப்பு!

இந்திரா காந்தியின் நினைவு தினம்: மத்திய மாவட்ட காங்., சார்பில் அனுசரிப்பு!


வேலூர், நவ. 1-

முன்னாள் பாரத பிரதமர் இந்தியாவின் இரும்பு மங்கை அன்னை இந்திராகாந்தியின் 41வது நினைவு தினம் 31.10.2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் அனுசரிக்கப்பட்டது.

நிகழ்விற்கு வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளரும், ஒன்றிய குழு உறுப்பினருமான செந்தில், RGPRS மாவட்ட தலைவர் ஆனந்தவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அன்னை இந்திராகாந்தியின் திருவுருவப் படத்திற்கு பேரணாம்பட்டு தெற்கு வட்டார தலைவர் சா.சங்கர், வேலூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவரும், பேரணாம்பட்டு மேற்கு வட்டார தலைவருமான கிருஷ்ணவேணி ஜலந்தர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். RGPRS மாநில துணைத் தலைவர் ராஜசேகரன், மாநில சிறுபான்மையினர் பிரிவு ஒருங்கிணைப்பாளர் எம். டி..ராகிப் ஆகியோர் முன்னாள் பாரதப் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்வில் வேலூர் மத்திய மாவட்ட மகளிர் காங்கிரஸ் தலைவர்  கோமதி குமரேசன் தீவிரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி வாசித்தார். நிகழ்வில் நிர்வாகிகள் கோவிந்தசாமி, ரஜினிகாந்த், மோகன்ராஜ், மகேஷ்வரன், விஜய்காந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%