28- ஆம் ஆண்டு கந்த சஷ்டி பெருவிழாவில் சஹஸ்ரநாம அர்ச்சனை சிறப்பு வழிபாடு.....

28- ஆம் ஆண்டு கந்த சஷ்டி பெருவிழாவில் சஹஸ்ரநாம அர்ச்சனை சிறப்பு வழிபாடு.....

 திருவண்ணாமலை அக்டோபர் -31 திண்டிவனம் சாலை ஸ்ரீ அருணகிரிநாதர் சித்தர் பீடத்தில் எழுந்தருளியுள்ள சோ.கீழ்நாச்சிப்பட்டில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ அறிவுக்கோற்கையன் சுவாமி திருக்கோயிலில் கந்த சஷ்டி பூஜையில் சிறப்பு அலங்காரத்துடன் முருகனடிமை வேத வித்து சுவாமிகள் அவர்களால் இன்று ஆலயத்தில் சஹஸ்ரநாம அர்ச்சனை வெகு சிறப்பாக நடைபெற்றது. உற்சவருக்கு முருகர் வள்ளி தெய்வானை மயில் வாகனத்தில் வண்ணமலர் மாலைகளுடன் அலங்காரத்தில் அருள் பாலிக்கும் காட்சி. வெகு சிறப்பாக நடைபெற்றது. சங்குகள் முழங்க, வேத மந்திரங்கள் ஒலிக்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க, பிரசாதம் நெய்வேத்தியங்களுடன் மகா தீபாரதனையும் நடைபெற்றது. பக்தர்கள் அரோகரா அரோகரா என்று முழுக்கமிட்டு சாமி தரிசனம் செய்தார்கள். பக்தர்கள் ஸ்ரீ முருகப் பெருமானை வேண்டி அருள் பெற்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு இ பேப்பர் செய்தியாளர் நிர்மலா ஸ்ரீதர் திருவண்ணாமலை

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%