இறைவன் அடி போற்று

இறைவன் அடி போற்று



    " ஏற்றமும்

       இறக்கமும்

       வாட்டமும்

       மலர்ச்சியும்

       தோற்றமும்

        ஆற்றலும் .... "


        அவன் செயல்


        நடப்பதும் நடிப்பதும்

        இழப்பதும் மீள்வதும்

        துடிப்பதும் துவள்வதும் ..."

     

        அவன் செயல்


         உறங்குவதும்

         விழிப்பதும்

          சாதனை படைப்பதும்

          சறுக்கு விழுவதும் ..."


          அவன் செயல்


          குடிசை கோபுரமாவதும்

          கோபுரம் குடிசையாவதும்

          வாழ்வதும் வளர்வதும்

          அழிவதும் அடங்குவதும் .... "


          அவன் செயல் 


           முற்போக்கு சிந்தனையும்

            மூட நம்பிக்கை ஒழிப்பும்

             எதற்கு....?


            புரியாமல் இருந்ததை

            புரிந்து கொண்டு

             பிறவி சுமையை

             கர்மாவை கழித்திட ....."


             அவன் செயல்


              பாதம் பிடித்து

               நலம் பெறுவோம்

               இறைவன் அடி

               போற்றி போற்றி .... "


- சீர்காழி .ஆர். சீதாராமன்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%