உன்னுள் தோன்றும் ஔியினில் எல்லாம் இறைவன் இருக்கின்றான்!
உன்னைப்போல எல்லா உயிரிலும் இறைவன் இருக்கின்றான்!
விண்ணும் மண்ணும் விரிந்து உயர்ந்து காட்சியும் தருகின்றான்!
முன்னம்.. இன்று.. நாளையும்.. என்று முக்காலமும் இருக்கின்றான்!
அன்னை.. தந்தை.. உருவில் வந்தே.. அன்பைப் பொழிகின்றான்!
ஆழிசூழ் உலகினினில்..
அவனே இருந்து.. நதியாய் வழிகின்றான்!
கண்ணும் கருத்தும் கலந்தே இருந்தவன்
கடவுளாய்த் தெரிகின்றான்..!
இன்னும் இன்னும்.. இயங்கும் பூமியில்.. நிழல் தர விரைகின்றான்.!
எத்தனை மாந்தர்கள் எப்படிப் பார்ப்பினும்.. அப்படித் தெரிகின்றான்!
இயேசு அல்லா.. ஈசன் என்றாலும் புன்னகைப் புரிகின்றான்!
இத்தனை மாந்தர்கள் உயிர்கள் யாவுக்கும் சக்தியைத் தருகின்றான்!
சித்தம் நிறைந்தவன்.. செயலெனப் இருப்பவன்.. பேரருள் பொழிகின்றான்!
*வே.கல்யாண்குமார்*
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?