உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் மூன்றாம் பிறை சந்திர தரிசனம்:
Oct 24 2025
19
திரளான பக்தர்கள் பங்கேற்பு.
செய்யாறு அக். 25,
செய்யாறு அடுத்த உக்கல் அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் மூன்றாம் பிறை சந்திர தரிசன நிகழ்வு நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த காஞ்சிபுரம் -வந்தவாசி நெடுஞ்சாலையில் உள்ள கூழமந்தல் அருகில் உள்ளது உக்கல் கிராமம் .இங்கு அருள்மிகு மடாவளம் ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயில் எழுந்தருளி உள்ளது.
பிரசித்தி பெற்ற நிகழ்வான மூன்றாம் பிறை சந்திர தரிசன நிகழ்வு நேற்று முன்தினம் நடைபெற்றது. ஆலய குரு சங்கர் குருஜி யாகசாலை ஹோமம் ,மற்றும் சிறப்பு அபிஷேகம் ,ஆராதனை மேற்கொண்டார்.
பின்னர் நடந்த மகா ஆரத்தி நிகழ்வில் அம்பாள் நெற்றியில் தோன்றிய மூன்றாம் பிறை சந்திர தரிசன நிகழ்வை திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?