உக்ரைனில் தேர்தலை தடுத்து நிறுத்த போரை நடத்துகிறார் ஜெலன்ஸ்கி: அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் தாக்கு

உக்ரைனில் தேர்தலை தடுத்து நிறுத்த போரை நடத்துகிறார்   ஜெலன்ஸ்கி: அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் தாக்கு



தேர்தலை தடுத்து நிறுத்துவதற்காக போரைப் பயன்படுத்துகிறார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து, ''உக்ரைன் தேர்தல்களுக்குத் தயாராக உள்ளது' என அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.


உக்ரைன்–ரஷியா இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் உக்ரைன் நிலப்பரப்பின் 20 சதவீதத்தை ரஷியா ஆக்கிரமித்துள்ளது. இரு நாடுகளுக்குமிடையேயான போரால் பெரும் அளவு உயிரிழப்புகளும் பொருள் சேதமும் ஏற்பட்டுள்ளன. வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.


குறிப்பாக டிரம்ப் பதவியேற்ற பிறகு அமைதி பேச்சுக்களை விரைவுபடுத்தி வருகிறார். உக்ரைனிடம் கைப்பற்றிய பிரதேசங்களை ரஷியா திருப்பித் தர மறுக்கிறது; இதை உக்ரைன் ஏற்க மறுக்கிறது. இதனால் மோதல் தொடர்ந்து நீடிக்கிறது.


இதற்கிடையே, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் ஐந்தாண்டு பதவிக்காலம் 2019-லேயே முடிவடைந்தது. ஆனால் ரஷ்ய படையெடுப்பால் உக்ரைனில் போர் சட்டம் அமலில் உள்ளதால் தேர்தல் தடைப்பட்டுள்ளது. தற்போது, போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முன்வைத்த அமைதி திட்டத்துக்கு உக்ரைன் அதிபர் சம்மதம் தெரிவிக்கவில்லை.


இதனால் அதிபர் டிரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மீதான விமர்சனத்தை தீவிரப்படுத்தினார்.


இது குறித்து டிரம்ப் கூறியதாவது:–


உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி போர் குறித்து யதார்த்தமாக இருக்க வேண்டும் என்று நான் நினைக் கிறேன். அவர்கள் தேர்தல் நடத்துவதற்கு எவ்வளவு காலம் ஆகும். அவர்கள் ஜனநாயகம் பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் அது இனி ஜனநாயகம் இல்லாத ஒரு கட்டத்திற்குச் செல்கிறது என்றார்.


இதற்கு, பதில் அளித்து ஜெலென்ஸ்கி கூறியதாவது:– அமெரிக்கா மற்றும் பிற நட்பு நாடுகளின் உதவியுடன் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டால், அடுத்த 2 முதல் 3 மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்படும். நான் இப்போது கேட்கிறேன், இதை வெளிப்படையாகக் கூறுகிறேன்.


தேர்தல்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அமெரிக்கா எனக்கு உதவ வேண்டும். உக்ரைனில் தேர்தல் பிரச்னை, முதலில் நமது மக்களைச் சார்ந்தது என்று நான் நம்புகிறேன், இது உக்ரைன் மக்களுக்கான கேள்வி, மற்ற நாடுகளின் மக்கள் அல்ல. இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறினார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%