உடுமலையில் பள்ளி மாணவர்களுக்கான வாசிப்பு இயக்கம்

உடுமலையில் பள்ளி மாணவர்களுக்கான வாசிப்பு இயக்கம்

 உடுமலை இலக்கிய களத்தின் சார்பில் அரசுப்பள்ளி மாண வர்களுக்கான வாசிப்பு இயக்கம் உடுமலை மீனாட்சி திருமண மண்டபத்தில் சனியன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர் செல்லத்துரை தலைமை வகித்தார். ஆசிரியர் முனியப்பன் வரவேற்றார். இதில் சோமந்துறை சித்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சோலைமாயவன் வாசிப்பு இயக்கத் தை துவக்கி வைத்து, வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். அரசு பள்ளி நூலகங்களுக்கு வழங்கிய நுழை, நட, ஓடு, பற, ஆகிய கதை புத்தகங்கள் வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன. இதில் 12 அரசுப்பள்ளிகளை சேர்ந்த 4 ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் 59 மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர்களை அவர்களது வாசிப்புத்திற னுக்கு ஏற்றபடி குழுவாக பிரித்து புத்தகங்கள் வாசிக்க கொடுக்கப்பட்டன. ஒரு மணி நேரம் புத்தகங்களைப் படித்த மாணவர்கள் தங்களுக்குள் புத்தகங்களை மாற்றிக் கொண்டு புத்தகங்களை வாசித்தனர். பின்னர் வாசித்த புத்தகங்களில் உள்ள கதைகளை மாணவர்கள் அவையில் எடுத்துக் கூறினர். கவிஞர் இளையவன் சிவா, ஆசிரியர் சந்திரசேகர் மற்றும் ஆசி ரியை சுமித்ரா பொள்ளாச்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியை ஆகியோர் வாழ்த்திப் பேசினர். நிறைவாக ஆசிரியர் ஈஸ்வரசாமி நன்றி கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%